மோசமான உணவு பழக்கத்தினால் நம் நரம்பு மண்டலம் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் வரும் ஆனால் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். இதுகுறித்து மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் சித்தா டாக்டர் நித்யா கூறி இருக்கும் தகவல்கள் வருமாறு,
நரம்புகளை பலப்படுத்த எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்: பொண்ணாங்கன்னி கீரை, வல்லாரை கீரை, புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் போன்ற கொடி காய்கள் மற்றும் இலவங்க பட்டை
வைட்டமின் ஏ மற்றும் பி அடங்கிய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
பூசணி விதைகள் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிகம் கொண்டுள்ளது. இது நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவும் என்கிறார் மருத்துவர் நித்யா. தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.
சாப்பிட வேண்டிய உணவுகள் | To get strong nerves | Narambugal valimai pera | Dr.Nithya | Mr Ladies
பொன்னாங்கண்ணிக்கீரை, வல்லாரை கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. எனவே அவற்றை தினமும் சாப்பிடலாம்.
நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.