கால் வீக்கமா? உஷார்... கிட்னி பாதிப்பு அறிகுறி; இந்தக் கீரை பெஸ்ட்: டாக்டர் நித்யா

கால் வீக்கமாக இருக்கிறதா? அப்படி என்றால் கிட்னி பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை தடுக்க சாப்பிட வேண்டிய முக்கியமான கீரையை பற்றி மருத்துவர் நித்யா கூறுகிறார்.

கால் வீக்கமாக இருக்கிறதா? அப்படி என்றால் கிட்னி பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை தடுக்க சாப்பிட வேண்டிய முக்கியமான கீரையை பற்றி மருத்துவர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
கால் வீக்கம்

கால் வீக்கமும் மருத்துவர் நித்யா பதிலும்

கால் பாதங்களில் எதனால் வீக்கம் ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும். என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். இதுகுறித்து நித்யா’ஸ் வரம் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறியிருப்பதாவது,

Advertisment

கால் வீக்கம் ஏற்பட காரணம்: வெரிகோஸ் வெயின், வாதம் சார்ந்த பிரச்சனை, இரத்தசோகை, சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் குறிப்பாக சிகேடி பிரச்சனை உள்ளவர்களுக்கு வீக்கம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.

சிலருக்கு தொடை வரை கால் வீக்கமாக இருக்கும். சிலருக்கு வயிறு பகுதியிலும் வீக்கம் இருக்கும். சிலருக்கு முகத்தில் வீக்கம் இருக்கும் இதற்கு காரணம் சிறுநீரகக் கோளாறு தான். மேலும் சிலருக்கு உடலில் அதிகம் நீர் தேங்கி இருக்கும். இதனால் வீக்கம் உள்ள பகுதிகளில் புண்கள் ஏற்படுட்டு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். 

இதற்கு முதலில் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் நித்யா. அதே மாதிரி இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

Advertisment
Advertisements

கால் பாதங்களுக்கு முன் பெருவிரலில் உள்ள வீக்கமும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிதான். எனவே கிட்னி செயல்பாட்டை கவனிக்க வேண்டும். 

இதற்கு உப்பு சுவையை குறைவாக எடுக்க வேண்டும். அசைவ உணவை சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆங்கிலத்தில் படிக்கவும்:

கால் வீக்கம் எதனால் வருகிறது? கால் வீக்கம் குறைய என்ன செய்யணும்? 5 leg swelling treatment exercises

மூலிகைகள்: தசவேதாரி சூரணம், தாதுவிருத்தி சூரணங்கள் வாங்கி வெந்நீரில் கலந்து தினமும் சாப்பிடலாம் என்று மருத்துவர் கூறுகிறார். அதேபோல மூக்கிரட்டை கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையான நீரை வெளியேற்றும். யூரிக் ஆசிட்  அளவை கட்டுப்படுத்தும். 

சிலருக்கு தொலை தூர பயணத்தால் கூட கால் வீக்கம் ஏற்படும். ஆனால் அது 2 நாட்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறுகிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Tamil Health Tips health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: