goat milk benefits in tamil: பொதுவாக உட்கொள்ளப்படும் பால் வகைகளில் ஆடுப் பாலும் ஒன்றும். உலகளவில் நுகரப்படும் அனைத்து பால் பொருட்களில் 65-72 சதவீதம் ஆடுப் பால் உள்ளடங்கியுள்ளதாக வெப்எம்டி இணைய பக்கம் குறிப்பிட்டுள்ளது. வளரும் நாடுகளில் மாடுகளுக்கு மாறாக ஆடுகளை வைத்திருப்பது ஓரளவுக்குக் காரணமாகும். ஆடு பால் கலோரிகள், புரதம் மற்றும் கொழுப்புகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இது வசதியாக கிடைக்கும் பால் வகை மட்டுமல்ல. பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்று ஆயுர்வேதத்தம் குறிப்பிடுகிறது. ஆயுர்வேத நிபுணரான டாக்டர் ரேகா ராதாமோனி கூறுகையில், “எனது குடும்பத்தில் குழந்தை பிறந்தால், மக்கள் முதலில் கவனிப்பது நல்ல ஆட்டுப்பாலைத்தான்.
எனது பாட்டியைக் கேட்டால், ஆட்டுப்பால் குழந்தைகளுக்கு சிறந்தது என்று சொல்வார். ஆனால் அதற்கான காரணம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படித்தான் ஆயுர்வேதம் நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
ஆட்டுப்பாலின் நன்மைகளை விளக்கிய டாக்டர் ராதாமணி, ஆட்டைப் பற்றி முதலில் புரிந்துகொள்வது அவசியம் என்று அவரது பதிவில் தெரிவிக்கிறார். மேலும், "ஆடு மெலிந்த, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும், நிறைய தண்ணீர் குடிக்கும் மற்றும் புல் சாப்பிடுவதை விரும்புகிறது. ஆட்டுப் பாலிலும் இதே போன்ற பண்புகள் உள்ளன," என்று கூறுகிறார்.
இவை தவிர, டாக்டர் ராதாமணி அவரது இன்ஸ்டா பதிவில் ஆடுப் பாலை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றை இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
*ஆட்டுப்பால் உடலை மெலிதாக வைத்திருக்க உதவுகிறது.
- இது உங்களை சுறுசுறுப்பாக ஆக்குகிறது மற்றும் வலிமையை மேம்படுத்துகிறது.
- வறட்சி மற்றும் பலவீனத்திற்கு நல்லது.
- ஆட்டுப்பால் கபாவை குறைக்கவும் உதவுகிறது.
“குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக நிறைய தண்ணீர் சேர்த்து நீர்த்த ஆட்டுப்பால் நல்லது. இது குழந்தைகளின் தளர்வான இயக்கங்களை குறைக்க உதவும்," என்று டாக்டர் ராதாமணி கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil