தினமும் கொஞ்சம் முளைகட்டிய வெந்தயம்… தோலுக்கும் முடிக்கும் அருமருந்து இதுதான்; டாக்டர் வேணி

தினமும் கொஞ்சம் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் வேணி கூறுவது பற்றி பார்ப்போம்.

தினமும் கொஞ்சம் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் வேணி கூறுவது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முளைக்கட்டிய வெந்தயம்

பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக இருக்கும் வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்திருப்பதாக மருத்துவர் வேணி கூறுகிறார். வெந்தயத்தில் அதிகப்படியான பயோட்டின் உள்ளது என டாக்டர் கூறுகிறார். வெந்தயம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும், ஈரலில் படிந்திருக்கும் கொழுப்பை கரைக்கவும் வெந்தயம் அதிகளவில் பயன்படுகிறது. 

Advertisment

வெந்தயத்தை முளைக்கட்டி சாப்பிடும் போது அதில் அதிக அளவு பயோட்டின் இருக்கும். எனவே முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடும் போது அது தோல் பளபளப்பாகவும் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவும் என டாக்டர் கூறுகிறார். 

வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெந்தயத்தை பச்சையாக சாப்பிடலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் அல்லது கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் வெந்தயத்தை சாப்பிடலாம். எலும்புகள் பலமாகும். இதயத்திற்கும் நலல்து. 

பண்டைய காலம் முதல் இன்று வரை வெந்தயம் எல்லாவித நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது. அப்படியாக அன்றே நிறையபேர் வெந்தயத்தை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது. அதை உணவில் சேர்ப்பது நல்லது என்று பழக்கப்படுத்திவிட்டார்கள். குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் புழுக்களை எளிதில் வெளியேற்ற வெந்தயம் உதவுகிறது.

Advertisment
Advertisements

கால்சியம் உள்ளதால் தீராத மூட்டு வலிகள், உடல் சார்ந்த வலிகள், இடுப்பு வலிகளால் ஏற்படும் உபாதைகளுக்கு முழு நிவாரணம் அளிக்கின்றது. மலச்சிக்கல், உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கும் வெந்தயம் தீர்வாக இருக்கும். 

வெந்தயம் சாப்பிடும் முறை: ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் வெந்தயம் என்ற அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று இரவுகள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து அதனை நான்காவது நாள் காலையில் தண்ணீர் விட்டு அரைத்து பால் பிழிந்து சாப்பிடலாம். அல்லது  அதை வேக வைத்து சாப்பிடலாம். இதை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Benefits Of Fenugreek Seeds Benefits of consuming fenugreek

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: