அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுவதோடு வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தருவதாகவும் மருத்துவர் மைதிலி கூறுகிறார். இதுகுறித்து மேலும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
இன்றைய சூழலில் சிறுவயது முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல் வலிமை குறைந்துவிடுகிறது, இதனால் கை கால் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் வாரம் இருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.
மரவள்ளிக்கிழங்கில் வைட்டமின் A, B2, C, பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாள் முழுக்க இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும் என்று மருத்துவர் கூறுகிறார்.
மரவள்ளிக் கிழங்கு ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும், உடலில் நீரின் அளவை, சரியாக வைத்துக்கொள்ள உதவும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்க உதவும்.
மரவள்ளி கிழங்கு சாப்பிடும் முன் இதை தெரிஞ்சிகோங்க Maravalli kizhangu benefits tamil /Dr.Mythili fufu
மரவள்ளிக்கிழங்கு மாவில் கஞ்சி செய்து, பால், பனை வெல்லம் கலந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிட, உடல் வலுவாகும்.
அரிசி மாவிற்கு மாற்றாக மரவள்ளிக்கிழங்கு மாவு எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. கால்சியம் சத்து இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் மூட்டுகள் மற்றும் எலும்புகளை பலம் பெறச் செய்கிறது.
மரவள்ளி கிழங்கினை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் மூளை தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மூளை பக்கவாதம் உள்ளவர்கள் இந்த கிழங்கினை சாப்பிடக்கூடாது. இதனை பச்சையாக சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.