முருங்கைக் கீரையில் நிறைய அமினோ அமிலங்கள் உள்ளன. அது மட்டும் இன்றி செல்களை புதுப்பிக்கக்கூடிய தன்மையும் அதற்கு உண்டு என்று மருத்துவர் சிவராமன் இயற்கை வாழ்வியல் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
முருங்கையை நெய் விட்டு வதக்கி கீரையாக சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும். அதுமட்டுமின்றி இரும்புச்சத்து நிறைந்த கீரை கேரட்டை விட உடலுக்கு நன்மை தரக்கூடியது. அப்படிப்பட்ட முருங்கை கீரையில் கடையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
முருங்கைக்கீரை கல் உப்பு துவரம் பருப்பு மஞ்சள் தூள் தக்காளி பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் நல்லெண்ணெய் மிளகு சீரகம் பூண்டு
செய்முறை
முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் முருங்கைக்கீரை கட்டு எடுத்து சுத்தம் செய்து அதில் சிறிது கல் உப்பை சேர்த்து நன்றாக அலசி கழுவி வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தையோ அல்லது குக்கர் வைத்து துவரம் பருப்பை போட்டு கழுவி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் போட்டு முக்கால் பாகம் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
முக்கால் பாகம் பருப்பு வெந்ததும் அதில் சுத்தம் செய்த முருங்கைக் கீரையை போட்டுக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இவை அனைத்தும் போட்டு 10 நிமிடம் வேகவிட்டால் கீரையும் பருப்பும் சரியான பக்குவத்தில் வெந்து கிடைக்கும்.
அப்போது அதனை தாளிப்பதற்கு ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டு இவை அனைத்தையும் தாளித்து கீரையில் கொட்டவும்.
இவைகளை தாளித்து இதை அப்படியே கீரையில் கொட்டி ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரை இதில் ஊற்றி நன்றாக கலந்து, சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.