பி.பி, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அதனுடன் சேர்த்து இந்தக் கிழங்கும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் மைதிலி கூறுகிறார். அதுகுறித்து அவர் தனது மைதிலி ஆயுர்வேதிக் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, B6, B-9 அதிக அளவில் உள்ளது. சேப்பங்கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளது.
இதனால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். குறிப்பாக நுரையீரல், கல்லீரல் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லை, மலச்சிக்கல் போக்கும். இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராக பாதுகாக்கும்.
சேப்பங்கிழங்கு இத்தனை நோய் தடுக்குமா? இலையில் மட்டும் இத்தனை நன்மையா? Sepankizhangu benefits tamil
ஆன்டிஆக்சிடெண்ட்கள் இந்த சேப்பங்கிழங்கில் அதிகம் உள்ளதால், கண் பார்வையை தெளிவாக்கும். கண்புரை போன்ற பாதிப்புகளையும் தடுத்து நிறுத்தும்.
குடல் புண்கள் இருந்தால், சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் போதும் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கிழங்கு குணப்படுத்தும்.
சேப்பங்கிழங்கின் இலைகளில் வைட்டமின் சி, மெக்னீசியம் உள்ளது. சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. அதுவும் டைப் 2 வகையை அழிக்கும்.
சேப்பங்கிழங்கு ஒரு இலை எடுத்து கொதிக்க வைத்து தினமும் குடிக்கலாம். இதனை பருப்பு போட்டு கீரை மாதிரி சமைக்கலாம்.நெய் சேர்த்து கூட்டு மாதிரி சமைத்து சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.