எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, கால் வலி, கழுத்து வலி என பல்வேறு வலிகளில் அவதிப்படுகிறார்கள். வேலை பளு மற்றும் உணவு பழக்கமும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி அதிகம் ஏற்படுகிறது. அப்படி வலியால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து குடிக்க வேண்டிய ஒரு ஹெல்த் ட்ரிங்க் பற்றி ஜோஸ் தமிழ் ஹெல்த் அண்ட் பியூட்டி சேனலில் இருக்கும் வீடியோ ஒன்றில் கூறி இருக்கும் தகவல்கள் வருமாறு,
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி
கருப்பு உளுந்து
பார்லி அரிசி
ஏலக்காய்
சுக்கு பொடி
செய்முறை
ஒரு கடாயில் ஜவ்வரிசி போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். ஜவ்வரிசி அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. எனவே இவற்றை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
அதேபோல கருப்பு உளுந்து எடுத்து வறுக்கவும். அடுத்ததாக பார்லி அரிசி எடுத்து அதே போல வறுக்கவும். அதில் வாசனைக்காக சிறிது ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் இவை அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் பொடி மாதிரி நைசாக அரைத்துக் கொள்ளவும். வாசனைக்காக சுக்கு பொடி சேர்த்துக் கொள்ளவும். சுக்கு சேர்ப்பதால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகளும் இருக்காது.
பின்னர் இதனை பூச்சி விழாதவாறு ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளவும். இப்போது தேவையான அளவு பொடி எடுத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
எலும்பு தேய்மானமா இடுப்பு வலி மூட்டு வலி கழுத்துவலி தாங்க முடியலயா கால்சியம் இல்லையா 1கிளாஸ் குடிங்க
கரைத்த பொடியை சூடான பாலில் சேர்த்து இனிப்பு சுவைக்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
எலும்புக்கும் உடலுக்கும் அவ்வளவு வலுவாக இருக்கும். பெண்கள் தினமும் இதை குடிக்கலாம். ஒரு மாதம் குடித்து வந்தாலே உடலில் நல்ல மாற்றத்தை காணலாம்.
இவை அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. கால்சியம், சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளத்தால் இடுப்பு வலி, கழுத்து வலிக்கு சிறந்த மருந்தாகும். அதுமட்டுமின்றி மாதவிடாய் நேரங்களிலும் பெண்கள் இதை சாப்பிடும் போது வழியில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு மிகவும் நல்லது.