இடுப்பு, மூட்டுகளில் வின்னு வின்னுன்னு வலி... பாலுடன் ஒரு ஸ்பூன் இந்தப் பொடி; ஒரு வாரம் இப்படி சாப்பிட்டு பாருங்க!
இடுப்பு மற்றும் மூட்டு வலிகளை போக்குவதற்காக நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சத்து மாவு தயாரித்து குடிக்கலாம். இது நம் எலும்புகளை உறுதியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
இடுப்பு மற்றும் மூட்டு வலிகளை போக்குவதற்காக நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சத்து மாவு தயாரித்து குடிக்கலாம். இது நம் எலும்புகளை உறுதியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
முன்னர் இருந்த காலத்தில் சுமார் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கை, கால் மூட்டு வலிகள் இருந்தன. ஆனால், தற்போது வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் என இளம் வயதினருக்கு கூட இடுப்பு மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்படுகிறது.
Advertisment
குறிப்பாக, கால்சியம் சத்து குறைபாடு இருந்தாலும் இது போன்ற வலிகள் ஏற்படும். அந்த வகையில் வீட்டிலேயே சத்து மாவு தயாரித்து எப்படி பயன்படுத்தலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து வறுக்க வேண்டும். இது நன்றாக பொறிந்து வந்ததும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். இப்போது அதே பாத்திரத்தில் கருப்பு எள்ளு சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும்.
இதையும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு கருப்பு உளுந்தை அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் போட்டு வறுக்க வேண்டும். இதன் பின்னர், பார்லி அரிசி மற்றும் 5 ஏலக்காய்களை இதே போன்று வறுக்க வேண்டும்.
Advertisment
Advertisements
பின்னர், இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை இத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்ததும் இந்தப் பொடியை மற்றொரு டப்பாவிற்கு மாற்றி விடலாம். இந்தப் பொடியை சுமார் ஒரு மாதத்திற்கு பயன்படுத்த முடியும்.
இப்போது இந்தப் பொடியை பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம். ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்தப் பொடியை எடுத்து சிறிதளவு தண்ணீரில் கரைக்க வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அது பொங்கி வரும் போது, நாம் கரைத்து வைத்திருக்கும் பொடி கரைசலை சேர்க்க வேண்டும்.
இதனை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விடலாம். இறுதியாக சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலை என இரு வேளையும் இதனை குடிக்கலாம். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து குடித்தாலே மூட்டு வலி குறையத் தொடங்கும்.
நன்றி - Jo's Tamil Health and Beauty Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.