குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன கொடுப்பது என்று தெரியாமல் ஏதோ ஒரு உணவை வாங்கி தருகிறீர்களா? அதனால் குழந்தைகளின் வயிறு தான் நிறையும். ஆனால் உடலுக்கு சத்து கிடைக்காது.
எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு சாப்பிட் கொடுப்பது அவ்வளவு நல்லது. கடலை மிட்டாய் எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கக் கூடியது. இது மிகச்சிறந்த ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றாகும்.
இது உடலுக்கு அதிக வலு சேர்க்கக் கூடியதாகும். இதில் அதிக புரதங்கள் உள்ளது. மெலிந்த குழந்தைகளுக்கு இதை சாப்பிட கொடுக்கலாம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இதை கொடுக்க பழக்கிவிட வேண்டும்.
கடலை மிட்டாயில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
கடலை மிட்டாய் ஏன் சாப்பிட வேண்டும் | Dr.Sivaraman
இதில் அதிகப்படியான புரதம் உள்ளதால் நமது உடலுக்கு தேவையான பாதி புரதம் இதிலிருந்தே நமக்கு கிடைத்து விடுகிறது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
இந்த கடலை மிட்டாயில் உள்ள நார்ச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு மிக நல்லது. கால்சியம் சத்து உடலின் எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவும். கடலை மிட்டாயை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை
தண்ணீர்
வெல்லம்
செய்முறை
முதலில் வேர்க்கடலையை உப்பு சேர்க்காமல் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து பாகு ஆகும் வரை மீடியம் சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும்.
பாகு தயாரானதும் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறி வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
பின்னர் இரண்டு கைகளிலும் நெய் தடவி எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் கடலை மிட்டாயை உருட்டி ஒரு அரை மணி நேரம் காய வைத்து எடுத்தால் சுவையான கடலை மிட்டாய் தயார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“