இன்றைய சூழலில் உணவை விட மருந்து மாத்திரைகளை தான் நாம் அதிகம் சாப்பிடுகிறோம். அப்படி இருக்கையில் மருந்துகளுடன் சரிவிகித உணவும் அவசியம்.
என்னதான் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது என்று பாதாம், பிஸ்தா பருப்பு வகைகளை அதிகம் வாங்கி சாப்பிட்டாலும் எல்லோராலும் அதனை வாங்கி சாப்பிட முடியாது.
ஊட்டச்சத்து என்றாலே பாதாம் பிஸ்தா போன்ற பருப்புகளை தான் முதலில் சாப்பிட செய்வோம். ஆனால் எல்லோராலும் இதனைத் தொடர்ந்து வாங்கி சாப்பிட முடியாது. அதேபோல சிலருக்கு இது பிடிக்காமலும் இருக்கும்.
அதனால் மிக குறைந்த விலையில் இதற்கு மாற்றாக சாப்பிடக்கூடிய பயிர்கள் பற்றி பார்ப்போம்.
1. வேர்க்கடலை: பாதாம் பருப்பை விட மிக அதிக சக்தி உள்ள மிகக் குறை வான ஒன்று வேர்க்கடலை ஆகும். இதில் அதிக புரதம் உள்ளது. இதை சாதாரணமாக தாளித்து சாப்பிடலாம். பிற உணவுகள் சமைக்கும்போதும் தேவையானவற்றில் இதனை சிரிது சேர்க்கலாம்.
2. கிட்னி பீன்ஸ்: நிறைய புரதச்சத்து உள்ள இந்த கிட்னி பீன்ஸ் எலும்புகளுக்கு நல்லது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
3. பன்னீர்: மூன்றாவது பன்னீர் - பால் பன்னீர், சோயா பன்னீர் இதில் பெரும்பாலும் நல்ல புரதம் அதிகம் உள்ளது. தூய பன்னீராக பார்த்து வாங்கி சாப்பிடுவது அவசியம்.
4. கருப்பு சுண்டல்: கருப்பு சுண்டல் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் சாப்பிட்டு தான் வருகிறோம். இருந்தாலும் சில குழந்தைகளுக்கு இது பிடிக்காது. அப்படி இருக்கையில் அவர்களுக்கு வடை, தோசை போன்றும் செய்து கொடுக்கலாம்.
5. ராகி: ராகியை தினசரி உணவில் சிறிது சேர்க்க வேண்டும். குழந்தைகள் உள்ள வீட்டில் ராகி தோசை, ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்து தரலாம்.
More nutrition then Badam & Pista ! But low foods list !
6. கம்பு: கம்புவில் அதிக புரதம் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் இது மாவாக கிடைக்கிறது. இதில் தோசை, கஞ்சி, சாதம் கூட செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
7. கருப்பரிசி: நம் சாப்பிடும் அரிசிக்கு பதிலாக வாரம் மூன்று அல்லது 4 நாட்களுக்கு கருப்பு அரிசியில் சமைத்து சாப்பிடலாம். எலும்புகள் வலுபெறும். மேலும் கட்டுக்கோப்பான உடலுக்கு உதவும்.
மேற்குறிப்பிட்டவற்றை தனியாக சாப்பிட சிரமப்படுபவர்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அதாவது இதை வைத்து சாதம் செய்து சாப்பிடலாம். மேலும் ஸ்நாக்ஸ் அல்லது சப்பாத்திக்கு குருமா மாதிரி சாப்பிடலாம்.
குறிப்பாக இந்த உணவுகளை காலையில் தான் சாப்பிட வேண்டும். கிட்னி பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்பவர்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.