மருத்துவ குணங்கள் நிறைந்த கொள்ளு மனிதர்கள் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.கொள்ளுப் பருப்பில் அதிகளவு மாவுச்சத்து உள்ளதால், அதை ஊற வைத்து அல்லது வறுத்தும் சாப்பிடலாம். அப்படியாக கொள்ளு சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
கொள்ளு எப்படி சாப்பிட வேண்டும். நேரம் இல்லாத பெண்கள் எப்படி ஈஸியாக கொள்ளை உணவை சேர்த்து கொள்ளலாம் என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அதாவது சிலருக்கு தினமும் டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து உடலை குறைக்க நேரம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் கொள்ளு சுத்தம் செய்து வறுத்து பொடி செய்து வைத்து அவ்வப்போது ரசத்தில் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்கவிட்டு சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் என மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார்.
இது எளிமையான வழிமுறையும் உடல் எடையில் நல்ல மாற்றத்தையும் காணலாம். ஏனென்றால் உடல் எடை குறைப்புக்கு கொள்ளு மிக முக்கியமான ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஊளைச்சதையை குறைக்கும் திறன் கொள்ளுப் பருப்பிற்கு உள்ளது.
கொள்ளுப் பருப்பில் அதிகளவு மாவுச்சத்து உள்ளதால், அதை ஊற வைத்து அல்லது வறுத்தும் சாப்பிடலாம்.வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்
உடல் எடையை குறைக்க ஈஸி டிப்ஸ்!
கொள்ளுப் பருப்பை அரைத்துப் பொடியாக்கி ரசத்தில் போட்டு உட்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொள்ளு உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.