எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் மருத்துவர் நிஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் க்ளேர் வேதா ஆயுர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நம் உடலின் தூணாக செயல்படுவது எலும்புகள் தான். எனவே, எலும்பை அடர்த்தியாக பராமரிப்பது, நம் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் நிஷா கூறுகிறார்.
35 வயதுக்கு மேல் இந்த எலும்பு அடர்த்தி குறையத் தொடங்கும். இதன் மூலம் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க கால்சியம் சத்து அவசியம். பால் பொருட்கள், ராகி, ப்ரோக்கொலி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் சாப்பிடலாம். அசைவ உணவுகளை பொறுத்த வரை சிக்கன், மீன், இறால், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம்.
How to boost your bone strength | Best Nutrients | Dr. Nisha
ஆனால், கால்சியம் சத்து மட்டுமே இதற்கு போதுமானது இல்லை. கால்சியம் சத்துகள் எலும்புக்கு செல்ல வேண்டுமென்றால் வைட்டமின் டி அவசியம் என மருத்துவர் கூறுகிறார். போதுமான அளவு சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைத்து விடும் என அவர் அறிவுறுத்துகிறார்.
இவை அனைத்தையும் சாப்பிட்டாலும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சரியான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி கால்சியம் சத்துடன் சேர்த்து வைட்டமின் டி, கே மற்றும் போரான் சத்துக்கள் தேவை என கூறுகிறார். 40 வயதுக்கு மேல் ஹார்மோன்ஸ் குறையும் அதற்கும் தேவையான உணவுகளை எடுக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.