சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் அளவிட முடியாதவை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும். இவ்வளவு நன்மைகள் கொண்ட சிறுதானியங்களில் ஒன்றான கம்புவை வளரிளம் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று தமிழ்ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மேலும் அவர் சிறுதானியங்களில் ஒன்றான கம்பு முக்கியமானது. கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அடை என பலவிதமான வெரைட்டி டிஸ்களாக கம்பை சாப்பிடலாம். கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தருகிறது.
கம்பு பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த உணவாகும். மாதத்தில் நான்கு முறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்வது பெண்களுக்கு நன்மை அளிக்கும். மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்து குடிக்கலாம். வலி குறையும்.
கம்பு ஏன் சாப்பிடணும்?
கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு மாத்திரை இல்லாமலேயே அதனை குணப்படுத்த முடியும். அதனால் கம்பை வாரத்தில் 4 முறை தாராளமாக எடுத்து கொள்ளலாம் என டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி தாய்ப்பால் சுரப்புக்கும் உதவும். பெருவாரியான மக்களை அச்சுறுத்து சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல உணவாகும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கம்பை ஏதேனும் ஒரு வகையான உணவாக அன்றாடம் எடுத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.