உடலில் உள்ள ஊளைச் சதையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றவும் உடல் எடையை குறைக்கவும் கொள்ளு உதவும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அப்படிப்பட்ட கொள்ளு வைத்து கொள்ளு துவையல் எப்படி செய்வது ஹோம் குக்கிங் தமிழ் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1/2 கப் ( 125 கிராம் ) எண்ணெய் - 2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 15 பூண்டு - 7 பற்கள் புளி துருவிய தேங்காய் - 1/2 மூடி கல்லுப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் எண்ணெய் - 3 தேக்கரண்டி கடுகு சீரகம் கறிவேப்பிலை
செய்முறை
ஒரு பானில் கொள்ளு சேர்த்து ,பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும். பின்பு நன்கு ஆறவிடவும். அதே பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்கவும். அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து கலந்து விடவும்.
பிறகு துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து விடவும். பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
Advertisment
Advertisements
பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்து கலந்து விட்டால் அவ்வளவு தான் சுவையான கொள்ளு துவையல் தயார்.