உடல் எடை குறைய எப்படி சாப்பிட வேண்டும் - டாக்டர் ஷர்மிகா
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் குறைவாகத்தான் உணவு சாப்பிடுகிறோம். ஆனால் உடல் எடை குறையவில்லை என்று கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே குறைவான உணவு சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா? என்று மருத்துவர் ஷர்மிகா டெய்சி ஹாஸ்பிடல் யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார்.
Advertisment
உணவு குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையாது. எந்த அளவுக்கு குறைவாக உணவு சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக பசி எடுக்குமே தவிர உடல் எடை குறையாது.
எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு உடல் எடை குறையாது. உடல் எடை அதிகரிக்க தான் செய்யும் என்கிறார்.
ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
நிறைய பழங்கள், நிறைய காய்கறிகள், அதிக புரதச்சத்து ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை எடுத்துக் கொள்ளும் போது பசி குறைந்து தசைகள் வலுப்பெற்று தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும்.
குறைவாக அரிசி சாதத்தை எடுத்துக்கொண்டு மற்ற காய்கறிகள், புரதங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல மாவுச்சத்து கட்டாயம் குறைத்து விட வேண்டும். உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் மாவுச்சத்தை குறைப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.