Advertisment

மாம்பழம், பால்… கோடைக்கு இந்த குளுகுளு குல்ஃபியை வீட்டுல செஞ்சு பாருங்க!

mango kulfi that started as a street food trend,Summer Dessert Recipes For cooling Down And Sweetening up: மாம்பழம் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. மேலும் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை குணமாக்குகிறது.

author-image
WebDesk
New Update
mango benefits in tamil: how to make mango kulfi tamil

Best Summer Desserts Everyone Should Try,The Easiest Summer Dessert anyone can Make

The stuffed mango kulfi which started as a street food trend,Delicious Desserts Perfect For Peak Summer: இந்தியாவில் பரவலாக கிடைக்கக்கூடிய பழ வகைகளில் மாம்பழம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா,உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாம்பழம் அதிகம் விளைவிக்கப்படும் இந்த பழங்கள் சுமார் 1,000 ரகங்களை கொண்டுள்ளன. இதில் அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் பிரபலமானவையாக உள்ளன.

Advertisment

மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இவற்றை அன்றாட சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் மற்றும் நரம்பு தளர்ச்சி பறந்து போகும்.

மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும் குணம் கொண்டதாக உள்ளது. இவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மாம்பழம் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. மேலும் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை குணமாக்குகிறது.

மாம்பழ குல்ஃபி:

மாம்பழத்தில் தயார் செய்யப்பட்ட இனிப்புகளை ருசிக்க 100 வழிகள் உள்ளன. கோடையில் அதிகமாக கிடைக்கும் இந்த அற்புத பழத்தை குல்ஃபி வடிவில் ருசிக்கலாம். இந்த ரெசிபியை உங்களது வீட்டிலே எளிய முறையில் செய்து விடலாம்.

மாம்பழ குல்ஃபி தயார் செய்யத் தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 5

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 3-4 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

கேசர் (விரும்பினால்)

செய்முறை:

முதல் 5 மாம்பழங்களிலிருந்து விதைகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை எடுக்கும்போது கத்தி மாம்பழ விளிம்புகளை வெட்டாமல் பார்த்துக்கொள்ளவும். விதையை முதலில் முறுக்கி, அது தளர்ந்து பின்னர் வெளியே இழுக்கவும். மாம்பழங்களின் மேல் மூடியை வைத்து, ஒவ்வொரு மாம்பழத்தையும் ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இதனால் குல்ஃபி ஸ்டஃபிங் தயாராகும் வரை அது நேராக நிற்கும்.

பாலை சுட வைக்க ஆரம்பித்து, மிதமான தீயில் 1/3 பங்காக குறைக்கவும். சர்க்கரை, ஏலக்காய் தூள், கேசர் சேர்க்கவும்.

இந்த குல்ஃபி கலவையை நன்றாக ஆற வைத்து மாம்பழங்களுள் நிரப்பிக் கொள்ளவும்.

மாம்பழ தோல் கொண்ட மூடியால் மூடி, குறைந்தது 12 மணிநேரம் உறைய வைக்கவும்.

பின்னர் கத்தியால் உரித்து மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.

இப்போது அவற்றை நீங்கள் ருசித்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food Tamil Food Recipe Healthy Breakfast Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment