காலை உணவு எப்போதும் வெறும் இட்லி, தோசையாக உள்ளதா அப்போ இந்த ஒரு டிஷ் ட்ரை பண்ணுங்கள். தோசை தான ஆனால் கொஞ்சம் ஸ்பைசாக சுவையாக எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
இது சுவையாகவும் இருக்கும் சத்தாகவும் இருக்கும். ரொம்ப நன்றாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியாக தோசை செய்து சாப்பிடுவதற்கு பதிலாக முருங்கைக்கீரை மற்றும் மசாலாக்கள் சேர்த்து அரைத்து மாவில் சேர்த்து சாப்பிடுவது சத்தாகவும் இருக்கும். புதுவிதமான சுவையும் கொடுக்கும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுக்கலாம். காலை உணவிற்கும் இது ஒரு ஹெல்த்தியான சாய்ஸ் ஆகும்.
இந்த தோசை ஸ்பைசியாகவும் சுவையாகவும் இருக்கும் இதற்கு அனைத்து வகையான சட்னி சாம்பார் பொருத்தமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை
எண்ணெய்
பூண்டு
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
மிளகு சீரகம்
உப்பு
செய்முறை
இதற்கு முதலில் தேவையான அளவு முருங்கைக் கீரை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
முருங்கைகீரை தோசை இப்படி செய்ங்க சுவையும் சத்தும் அருமை/moringa Keerai dosa /drumstick Leaves dosa
இதில் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலை சேர்த்து வதக்கவும். முருங்கைக் கீரைக்கு பதிலாக வேறு எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். கீரை நன்கு வதங்கி வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இது ஆறியது இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எப்போதும் போல தோசை மாவில் இந்த கீரையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து தோசை ஊற்றி சாப்பிடலாம். சுவையான சத்தான முருங்கைக்கீரை தோசை ரெடி ஆகிவிடும்.
இந்த தகவல்கள் கவிதா சமையலறை யூடியூப் சேனல் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.