எப்படி செய்து கொடுத்தாலும் கீரை சாப்பிட மாட்டிக்கிறாங்களா? அப்போ முருங்கை கீரை வைத்து சுவையான முருங்கை கீரை சப்பாத்தி செய்து கொடுங்கள். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் சுவையான முருங்கை கீரை சப்பாத்தி செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
கோதுமை மாவு
துருவிய இஞ்சி
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
சீரக தூள்
உப்பு
ஓமம்
எண்ணெய்
தண்ணீர்
நெய்
செய் முறை
கோதுமை மாவை, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், உப்பு, ஓமம், எண்ணெய், முருங்கை இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
இலைகளை நறுக்கி மாவுடன் சேர்த்தும் கலக்கலாம். படிப்படியாக தேவையான தண்ணீரை ஊற்றி, மாவை கலக்க ஆரம்பிக்கவும்.
மாவு தயாரானதும், கிண்ணத்தை மூடி, 10 நிமிடங்கள் ஊற விடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரிக்கவும்.
முருங்கைக்கீரை சப்பாத்தி | Murungai Keerai Chapathi Recipe In Tamil | Healthy Breakfast
உருண்டையில் மாவு தூவி, சப்பாத்திகளை மெதுவாகவும் சமமாகவும் உருட்டத் தொடங்குங்கள். அனைத்து மாவு உருண்டைகளையும் இந்த முறையில் உருட்டவும்.
அடுப்பில் ஒரு தவாவை வைக்கவும், அது சூடானதும், சப்பாத்திகளை வைத்து ஒரு பக்கம் வேக விடவும். வெந்ததும், மறுபுறம் திருப்பி நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
இருபுறமும் வெந்ததும் தவாவில் இருந்து இறக்கினால் அவ்வளவு தான் முருங்கை இலை சப்பாத்தி ரெடி. இந்த முருங்கை இலை சப்பாத்தியை கொஞ்சம் ஊறுகாய் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.