முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அனைத்துமே உடலுக்கு சத்து வாய்ந்தது தான். முருங்கையில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. உடம்புக்கு தேவையான அனைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளது.
அப்படி இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரையில் ஒரு மூன்று வாரம் வரை வைத்து சாப்பிடும் வகையில் பொடி செய்து எப்படி என்று பார்ப்போம்.
இந்த டிஷ் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் நமக்கு செய்து காட்டுகிறார்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை
உளுந்து
கடலை பருப்பு
துவரம் பருப்பு
உப்பு
பெருங்காயத்தூள்
சாதம்
எண்ணெய்
காய்ந்த மிளகாய்
கொத்தமல்லி
பூண்டு
சீரகம்
வெள்ளை எள்
கருவேப்பிலை
புளி
செய்முறை
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். இவற்றை கருக விடாமல் சிவந்து வரும் வரை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்ததை எடுத்து இந்த கடாயில் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். பின்னர் இவற்றையும் எடுத்து ஆற வைக்கவும்.
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு, சீரகம், வெள்ளை எள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பின்னர் இதில் கருவேப்பிலை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
Murungai Keerai Podi | Chef Venkatesh Bhat
மிதமான சூட்டில் இவற்றை வைத்து வறுக்க வேண்டும். இதில் சிறிதாக புளி சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். ஆறவைத்த அனைத்தையும் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
நல்ல பவுடர் கன்சிஸ்டென்சிக்கு வர வேண்டும். பின்னர் அரைத்ததை எடுத்து தனியாக வைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடி செய்து வைத்துள்ள முருங்கைக்கீரை பொடி சிறிது சேர்த்து வதக்கி வேக வைத்த சாதத்தை கொட்டி கிளறினால் முருங்கை பொடி சாதம் ரெடி ஆகிவிடும்.
இந்த தகவல்கள் அனைத்தும் வெங்கடேஷ் பட் இதயம் தொட்ட சமையல் சேனலில் இருந்து பெறப்பட்டது.