முருங்கைக்காய் சாப்பிடும் போது சுற்றியுள்ள சதையை மட்டும் சாப்பிட்டு உள்ளே இருக்கும் விதைப்பகுதியை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அதில் நிறைய சத்துக்கள் உள்ளதாக டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
முருங்கை விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் பகுதியின் இயக்கத்தையும் சீராக்கும், செரிமானத்தை சீராக வைக்க உதவும்.
மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் இது பயன்படும்.முருங்கை இலையில் பொதுவாகவே இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதேபோல இந்த கொட்டையும் சாப்பிடும் போது இரும்பு சத்து அதிகரிக்கும். ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
முருங்கை விதையை அன்றாட உணவில் தொடர்ச்சியாக சேர்த்து வரும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும். புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தூண்டக்கூடியவற்றை அளிக்கும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.
Advertisment
Advertisements
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. மாரடைப்பு வராது, ரத்த அழுத்ததை குறைக்கும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீரமைக்க உதவும். கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
கல்லீரல் மற்றும் நுரையீரலை மிகவும் ஆரோக்கியப்படுத்தி சீராக செயல்பட வைக்க உதவும். கல்லீரல் வீக்கம் ஏற்படுவதை குறைக்கும். ஆஸ்துமா பிரச்சனை குறைக்கும்.
சரும சுருக்கங்கள், சொரியாசிஸ், உடலில் கருமை நிறங்கள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.