உடல் எடை குறைவதற்கு காலை உணவு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
காலை உணவில் அதிக புரதம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வளவு புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த நவதானிய சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு சிகப்பு முச்சை பச்சை பட்டாணி வெள்ளை சுண்டல் காராமணி ராஜ்மா கருப்பு சுண்டல் கொள்ளு அவரை கொட்டை
Advertisment
Advertisements
செய்முறை
இவை அனைத்தையும் நன்றாக கழுவி ஒரு 7 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தும் குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
வெந்து வந்ததும் தண்ணியை இறுத்து தாளிக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பட்டை, சோம்பு, வர மிளகாய், தேங்காய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். ஒரு பானில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து அதில் வேகவைத்த இந்த பருப்பு வகைகளை சேர்த்து கிளறவும்.
பின்னர் இதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கி எடுத்தால் சுவையான நவதானிய சுண்டல் ரெடியாகிவிடும். தினமும் காலையில் இவற்றை சாப்பிடலாம் இவற்றில் புரதச்சத்துக்கள் உள்ளது. ஊறவைத்து வேகவைத்து இதனை செய்வதால் வாய்வு தொல்லை பிரச்சனையும் இருக்காது என்கிறார் மருத்துவர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.