Simple steps to make Idly Maavu Murruku recipe in tamil: சூடான மற்றும் மொறுமொறு முறுக்குகளை இட்லி மாவில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Simple steps to make Idly Maavu Murruku recipe in tamil: சூடான மற்றும் மொறுமொறு முறுக்குகளை இட்லி மாவில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Murruku Recipe In Tamil: மாலை நேரத்தில் மொறுமொறுவென கடித்து நொறுக்க முறுக்கு ரொம்பவே நன்றாக இருக்கும். இந்த அற்புதமான ஸ்நாக்ஸில் பல வகைகள் உள்ளன. இவற்றை கடலை மாவு மற்றும் அரிசி மாவில் தாயார் செய்தும் ருசிக்கலாம். மொறுமொறு முறுக்குகளை தயார் செய்ய நீங்கள் அதிகம் மெனக்கெட தேவையில்லை. உங்கள் வீட்டில் இட்லி தயார் செய்ய வைத்திருக்கும் மாவு போதுமானது. இவற்றை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வடை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Advertisment
சரி, இப்போது சூடான மற்றும் மொறுமொறு முறுக்குகளை இட்லி மாவில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
முறுக்கு ரெசிபி தயார் செய்ய தேவையான பொருட்கள்:-
Advertisment
Advertisements
இட்லி மாவு - ஒரு கப் பொட்டுக்கடலை - ஒரு கப் அரிசி மாவு - 2 ஸ்பூன் எள் அல்லது சீரகம் - ஒரு ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
முறுக்கு ரெசிபி சிம்பிள் செய்முறை:-
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் ஒரு கப் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர், ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் இட்லி மாவு சேர்க்கவும். மாவு புளிக்கமால் இருந்தால் மிகவும் நல்லது.
தொடர்ந்து அதில் முன்னர் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.
பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, கைகளால் மாவை பிசைய தொடங்கவும்.
முறுக்கு மாவுக்கு எப்படி மாவு கெட்டியாக பிசைய வேண்டுமோ அதே பதத்திற்கு மாவை நன்றாக பிசையவும்.
ஓரளவுக்கு மாவு உருண்டையாக பிசைந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசையவும்.
மாவை நன்றாக பிசைந்ததும், உடனடியாகவே முறுக்கு புளிய ஆரம்பிக்கலாம்.
எப்போதும் போல், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் புளிந்துள்ள முறுக்கு மாவை இட்டு, பொன்னிறமாக மாவு மாறும் வரை பொறுத்து, நன்றாக வேக வைத்து வெளியில் எடுக்கவும்.
இப்படியாக மாவுகளை பொரித்து எடுத்தால், சூடான மற்றும் சுவையான இட்லி மாவில் செய்த முறுக்கு ரெடியாக இருக்கும். அவற்றை நீங்கள் சுவைத்து மகிழலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil