அதிக இரத்த கொதிப்பு என்று தினமும் மாத்திரை சாப்பிடுபவர்கள் தினசரி உணவில் சாப்பிட வேண்டிய கட்டாய் உணவு முருங்கைக் கீரை ஆகும். காலை உணவில் முருங்கை கீரை கட்டாயம் இருக்க வேண்டும். தினசரி முருங்கை கீரை சாப்பிட இரத்த கொதிப்பு உடையவர்களின் உடலில் நல்ல மாற்றத்தை காணலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
அப்படிப்பட்ட மருத்துவ குணம் உள்ள முருங்கை கீரையை பயன்படுத்தி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
உப்பு
சின்ன வெங்காயம்
பூண்டு
மஞ்சள் தூள்
மிளகுத்தூள்
சீரகத்தூள்
செய்முறை
ஒரு கடாயில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கையிலையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், சிறிது நசுக்கிய பூண்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத் தூள், சிறிது சீரகத் தூள், சிறிது உப்புத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2 டம்ளர் தண்ணீர், ஒரு டம்ளர் அளவுக்கு வரும்வரை சுண்ட வேண்டும். நன்கு சுண்டிய பிறகு இறக்கி வடிகட்டி குடிக்கலாம். சூப் வைத்த முருங்கை இலைகளை வைத்து எப்போதும் போல பொறியல் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“