இனி கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது... இந்தக் கீரையில் ஒருமுறை கடையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
சுவையான பொன்னாங்கண்ணி கீரை கடையல் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். நம்முடைய கண் பார்வையை கூர்மையாக்குவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பொன்னாங்கண்ணி கீரை பயன்படுகிறது.
சுவையான பொன்னாங்கண்ணி கீரை கடையல் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். நம்முடைய கண் பார்வையை கூர்மையாக்குவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பொன்னாங்கண்ணி கீரை பயன்படுகிறது.
இன்றைய சூழலில் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட கண்ணாடி போடும் நிலையில் இருக்கின்றனர். சத்துக் குறைபாடு காரணமாக இப்படி ஒரு நிலையில் பலர் இருக்கின்றனர். பொன்னாங்கண்ணி கீரையில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏ நிறைய இருக்கிறது. அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வையை கூர்மையாக்க உதவி செய்கிறது.
Advertisment
அதன்படி, பொன்னாங்கண்ணி கீரையில் சுவையான கடையல் எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணி கீரை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய், சீரகம், அரிசி மாவு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம்.
Advertisment
Advertisements
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக கழுவிய பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கீரையை போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
மற்றொரு புறம், துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின்னர், இதனை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மசியலை, முதலில் வதக்கி வைத்திருந்த பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்த மசாலாவை கீரை மசியலுடன் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் கடலை பருப்பு ஆகிய அனைத்தையும் தாளித்து கீரை மசியலுடன் கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான பொன்னாங்கண்ணி கீரை ரெடியாகி விடும்.
நன்றி - SaKarasaathamum Vadakarium Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.