நம் உடலுக்கு தேவையான புரதம் மிக அவசியம். அதனால் தினசரி உணவில் புரதத்தை சேர்த்து கொள்வது அவசியம் என்று மருத்துவர் சந்தோஷ் கூறுகிறார். சைவம் மற்றும் அசைவம் என எந்த உணவுகள் இருந்தாலும் சரி அதில் புரதம் நிறைந்து இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் பிஹைண்ட்வுடஸ் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நமது உடல் சிறப்பாக செயல்பட தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் புரதம். புரதத்தை சரிவர சிறுவயதில் இருந்து சாப்பிட்டு வந்தால் தான் வயது முதிர்ச்சியில் வரும் உடல் வலி மற்றும் எலும்பு தேய்மான உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
புரதம் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்வதால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வலி வராமல் இருக்கும். இல்லையென்றால் 40 வயதுக்கு மேல் ஏன் சிறுவயதிலேயே வலி இல்லாமல் இருக்கலாம். அப்படியாக புரதம் நிறைந்த உணவுகள் சிலவற்றை பற்றி பார்ப்போம்.
அசைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை, சிக்கன், மீன் மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவை புரதத்தில் சிறந்தது. சைவ உணவு உண்பவர்களுக்கு பருப்பு, தானியம், பாதாம் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் நல்ல புரத உள்ளது. எனவே உணவில் அதிகம் புரதம் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று வேலையும் நாம் சாப்பிடும் உணவில் புரதம் சேர்த்து சாப்பிடலாம். சிலருக்கு சிக்கன் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு உடல் பருமன் கூடும், பெண் பிள்ளைகள் சீக்கிரம் பூப்பெய்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் என்பார்கள். ஆனால் வாரத்தில் ஒருநாள் வெறும் 4 துண்டுகள் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார் மருத்துவர் சந்தோஷ்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.