உங்கள் வீட்டு பிள்ளைகள் ஒல்லியாக மெலிந்த தேகத்துடன் இருக்கிறார்களா? என்ன கொடுத்தாலும் உடம்பு ஏறவில்லையா? அப்படி இருக்கும் பிள்ளைகளுக்கு தினமும் பாலில் ஒரு கிளாஸ் இந்த புரோட்டீன் பவுடர் செய்து கொடுங்கள்.
வீட்டிலேயே சுவையான ஹெல்தியான புரோட்டீன் பவுடன் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முழு பொட்டு கடலை
பாதாம்
வாழைப்பழம்
பேரீச்சம்பழம்
பால்
செய்முறை
பாதாம் பருப்பை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ஒரு மிக்சி ஜாரில் முழு பொட்டு கடலை மற்றும் ஊறவைத்த பாதாம் சேர்த்து நன்றாக பொடியாக அரைக்கவும்.
ஒரு பிளெண்டரில், நறுக்கிய வாழைப்பழம், விதை நீக்கிய பேரீச்சம்பழம், அரைத்த பொட்டு கடலை பாதாம் பவுடர், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
புரோட்டீன் மில்க் ஷேக் | Sattu Drink Recipe In Tamil | Healthy Recipes | Healthy Breakfast Ideas
பால் சரியான பதத்தை பெற மற்றொரு கப் பால் சேர்க்கவும். மீண்டும் அனைத்தையும் கலக்கவும். இப்போது ஒரு கிளாஸில் இந்த ஹெல்த் ட்ரிங்கை ஊற்றி, மேலே நறுக்கிய வாழைப்பழங்கள் மற்றும் சீவிய பிஸ்தா மற்றும் பாதாம் சேர்த்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.