டயட்டீஷியன் கிரண் குக்ரேஜா உணவு கட்டுக்கதைகளை முறியடித்து, அரிசி, வாழைப்பழம், மாம்பழம், பால், மாவுப் பொருட்களில் உள்ள குளுடென் பொருட்களைப் பற்றி எப்படி தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. அவை எவ்வாறு உடல் வடிவாக இருக்க உதவுகிறது என்பதை விளக்குகிறார்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று வருகிறபோது பல பெருமை மிக்க உணவுகளை சாப்பிடக் கூடாத உணவு பட்டியலில் தள்ளிவிடுகின்றனர். ஆனால், அவை ஒவ்வொன்றும் ஏன் நமது உணவுத் தட்டில் ஒரு முக்கிய மதிப்பைக் கொண்டுள்ளன என்பதற்கான காரணங்களை இயற்கை கூறுகிறது. எனவே, அவற்றை முழுவதுமாக நிராகரிப்பதற்குப் பதிலாக நமது உணவுத் திட்டத்தில் உணர்வுபூர்வமாகச் சேர்ப்பதுதான் நியாயமானது.
உடல் எடையில் சில கிலோக்களைக் குறைக்க முயற்சிக்கும்போது, மக்கள் அரிசி, வாழைப்பழம், மாவுப் பொருள்களில் உள்ள குளுடென் புரதம், பால் பொருட்கள் மற்றும் மாம்பழங்கள் போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஆனால், சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் கிரண் குக்ரேஜா வேறுவிதமாக கூறுகிறார். இந்த ஐந்து பொருட்கள் தொடர்பான உணவு கட்டுக்கதைகளை முறியடித்து, அவர் அவைகளின் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடுகிறார். இந்த உணவுகள் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஒருவருக்கு உண்மையில் எவ்வாறு உதவ முடியும் என்பதை விளக்குகிறார். பாருங்கள்!
அரிசி
அரிசி கார்போஹைட்ரேட்டின் வளமான ஆதாரம். இது உடலை உற்சாகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மனதில் வைத்து, ஒருவர் அரிசி சாதத்தை சாப்பிடும் முறையை மாற்றுமாறு அவர் பரிந்துரைக்கிறார்: “அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதை நாம் எளிதாக அதிகமாக உண்ணலாம். அரிசி சாதத்தில் நார்ச்சத்து அதிகரிக்கவும், செய்முறையின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கவும், நீங்கள் அரிசியில் நிறைய காய்கறிகளைச் சேர்க்கலாம். எனவே, அரிசி சாதத்தை முற்றிலுமாக நீக்குவதற்குப் பதிலாக, அதை சாப்பிடும் முறையை மட்டும் மாற்ற வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
குளுடென்
குளுடென் என்பது கோதுமை, கம்பு, பார்லி போன்றவற்றில் காணப்படும் புரதங்களின் பொதுவான பெயர். குளுடென் உள்ள இந்திய வீடுகளில் மிகவும் பொதுவான உணவுப் பொருள் ரோட்டி/சப்பாத்தி. குக்ரேஜா தனது குறிப்பில் கூறுகிறார், “மற்ற உணவுகளை விட குளுடென் கொண்ட உணவுகள் எடையை அதிகரிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே, உடல் எடையை குறைக்க உங்கள் உணவில் இருந்து சப்பாத்தியை விலக்காதீர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பால் பொருட்கள்
கால்சியம் நிறைந்த பால் பொருட்கள், கொழுப்பு உயிரணுக்களில் கொழுப்பு முறிவை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை அதிகரிக்கலாம் என்று உணவியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். பதப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.
வாழைப்பழம்
வாழைப்பழம் தாமதமாக வேலை செய்கிறதா? என்றால், வாழைப்பழங்கள் மிகவும் பயனுள்ளது. உங்களை நிறைவாக உணரவைக்கும். எனவே விரைவான காலை உணவுக்காக வாழைப்பழங்களை நாடுவது நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது என்று சொல்வது பாதுகாப்பானது. குக்ரேஜாவின் கருத்துப்படி, வாழைப்பழம் உடலை வடிவாக வைத்திருக்க உதவுகின்றன.
“வாழைப்பழங்கள் உண்மையில் உடல் எடை குறைப்புக்கு நல்லது. ஏனெனில், அவற்றில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மெதுவாக்குகிறது. ஃபைபர் உட்கொள்ளலை அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை 30% வரை குறைக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. எடை குறைப்புக்கான ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் வரை சாப்பிடுங்கள்” என்று அவர் பரிந்துரைக்கிறார்.
அளவாக மாம்பழங்களை உட்கொள்வதை பரிந்துரைக்கும் குக்ரேஜா, “மாம்பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் கொழுப்பை உருவாக்கும் செல்களை அடக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மாம்பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன. ஆனால், அது உணவு நார்ச்சத்து மற்றும் தண்ணீரில் மிக அதிகமாக உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, மாம்பழங்களை அளவாக சாப்பிடுங்கள்.” என்று கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“