நம் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க முருங்கைக் கீரை சாப்பிட வேண்டும் என சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
கீரைகளில் நிறைய வகைகள் இருந்தாலும், முதன்மையான தானாக இருப்பது முருங்கைக்கீரை தான். இரும்புச்சத்தின் களஞ்சியமான முருங்கை கீரை ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. விட்டமின் ஏ, விட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துக் காணப்படுகிறது.
முருங்கைக்கீரையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிக உடல் எடை, சர்க்கரை நோய், ரத்த சோகை, இதயநோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், முருங்கைக் கீரை தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.
இந்தநிலையில், இரத்த அழுத்தத்தை சீராக்க முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும் என சித்த மருத்துவ சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
சிலருக்கு இரத்த அழுத்தம் சில நேரங்களில் குறைவாக இருக்கும், சிலருக்கு அதிகமாக இருக்கும். இதற்கு சிறந்த தீர்வாக இருப்பது உணவில் முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்வது தான். இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க முருங்கைக் கீரை உதவுகிறது. அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், குறைவாக இருக்கும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் முருங்கைக் கீரை உதவுகிறது என்று சித்த மருத்துவர் சிவராமன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“