சத்துக்கள் நிறைந்த கீரையை தினமும் எந்த அளவு சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம். கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற சந்தேகங்களுக்கு ஏ.எஸ்.எம் இன்ஃபோ யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கீரையை நன்கு கழுவி சமைக்க வேண்டும். அதிகளவில் பச்சையாக சாப்பிடக்கூடாது. நன்கு சமைத்து சாப்பிட வேண்டும்.
கீரையை ஒரே நேரத்தில் அதிகளவில் சாப்பிடக்கூடாது. புளி சேர்த்து கீரையை சமைக்க கூடாது. இதற்கு பதிலாக எலுமிச்சை பழம் சேர்த்து கொள்ளலாம். சமைத்து முடித்த பிறகு இறுதியில் எலுமிச்சம் சாறு சேர்த்து கொள்ளலாம்.
கீரை சாறை வடிகட்டக்கூடாது. சாறோடு சேர்த்து தான் சாப்பிட வேண்டும். கீரையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும்.
இரவில் கீரையை சாப்பிட கூடாது. ஏனென்றால் முழுமையாக சுத்தம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கீரைகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?எந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா?
செரிமானம் ஆவதற்கு தாமதமாகும் என்பதால் அதை இரவில் எடுத்து கொள்ள கூடாது. அப்படி இரவில் சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கீரையை மீண்டும் சூடு செய்து சாப்பிட கூடாது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார்பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
சத்துக்கள்: கீரையில் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.