அதிக அளவு கால்சியம் இந்தக் கீரையில் தான்; எலும்பு வலுப்பெற தினமும் 100 கிராம் போதும்: டாக்டர் அகிலா

பெரும்பாலான கீரை வகைகளில் பொதுவான சத்தாக கால்சியம் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் எந்த விதமான கீரைகளில், எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது என்று மருத்துவர் அகிலா விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

பெரும்பாலான கீரை வகைகளில் பொதுவான சத்தாக கால்சியம் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் எந்த விதமான கீரைகளில், எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது என்று மருத்துவர் அகிலா விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Calcium spinach

எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது என்று பலருக்கும் தெரியும். அதேவேளையில், தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து இன்றி அமையாததாக இருக்கிறது. எனவே, நாம் தினசரி சாப்பிடும் உணவில் கால்சியம் சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisment

அந்த வகையில் சில கீரை வகைகளில் அதிகப்படியான கால்சியம் சத்து இருக்கிறது. அவற்றை தற்போது காணலாம். அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, தண்டுக் கீரை போன்றவை நம் ஊரில் எளிதாக கிடைக்கக் கூடியவை. இவற்றில் எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது என்று தெரிந்து எடுத்துக் கொள்வது அவசியம்.

அதன்படி, 100 கிராம் அகத்திக் கீரையில் 901 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கிறது. 100 கிராம் முருங்கைக் கீரையில் 314 மில்லி கிராம் கால்சியம் சத்து காணப்படுகிறது. இது தவிர 100 கிராம் பீட்ரூட் கீரையில் 151 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. 

மேலும், 100 கிராம் அளவிலான வெந்தயக் கீரையில் 274 மில்லி கிராமும், முள்ளங்கி கீரையில் 234 மில்லி கிராமும், பாலக்கீரையில் 82 மில்லி கிராமும், நூல் கோல் கீரையில் 368 மில்லி கிராமும், காளிஃபிளவர் கீரையில் 96 மில்லி கிராமும், தண்டுக் கீரையில் 300 மில்லி கிராமும் கால்சியம் இருக்கிறது.

Advertisment
Advertisements

இதேபோல், 100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் 388 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கிறது என்று மருத்துவர் அகிலா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அகத்திக் கீரையில் ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, கால்சியம் சத்தை நாம் பெறுவதற்கு, அதற்கு ஏற்றார் போல் நம் உணவு முறையை வடிவமைத்துக் கொள்வது அவசியம் என்று மருத்துவர் அகிலா பரிந்துரைக்கிறார்.

நன்றி - NRG Healthcare Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

calcium rich foods Spinach and its health benefits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: