என்ன முயற்சித்தாலும் உடல் எடை குறையவில்லை என்று புலம்புபவர்கள் தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவு பற்றி பார்ப்போம். தோசை மாவு மாதிரி ஒரு சில பொருட்களை சேர்த்து சுவையான மற்றும் ஹெல்தியான அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
சுரைக்காய் துருவல்
காரட் துருவல்
வெங்காயம்
பசலைக் கீரை
இஞ்சி
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
மிளகுத்தூள்
மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
செய்முறை
முதலில் சுரைக்காய், காரட், இஞ்சி ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பசலை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப்போட்டு அத்துடன் சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
அதில் துருவிய சுரைக்காய், காரட், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய பசலைக் கீரை, வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடைமாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
இப்போது அடை ஊற்றுவதற்கு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் அடை மாவை விட்டு சிறிது தடிமனான அடைகளாக ஊற்றி சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு குறைந்த தீயில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் மிகவும் ருசியான மற்றும் சத்தான அடை தயார். இதனுடன் வெல்லம், தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.