வீக்கம், அமிலத்தன்மை, ஒற்றைத் தலைவலி, எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றுக்கான இந்த 'குளிர்கால காலை பானத்துடன்' உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
ஆரோக்கியமாக இருக்க, ஆயுர்வேத நிபுணர், தினமும் காலையில் உங்கள் வழக்கமான தேநீருக்கு மாற்றாக இந்த பாணத்தை குடிக்க பரிந்துரைத்தார்.
குளிர்காலத்தின் ஆரம்பம் சளி, இருமல், இரைப்பை பிரச்சினைகள் மற்றும் தலைவலி போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுடன் தொடர்புடையது. எனவே, இந்த பருவத்தில் சத்தான உணவு மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதுடன், தினமும் காலையில் ஆரோக்கியமான ஆயுர்வேத பானத்தையும் பருக வேண்டும் என்று ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் பரிந்துரைத்தார்.
“முடி உதிர்தல், ஒற்றைத் தலைவலி, எடை குறைப்பு, ஹார்மோன் சமநிலை, சர்க்கரை அளவை நிர்வகித்தல், இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி (இருமல்-சளியைத் தடுக்க) ஆகியவற்றுக்கான இந்த குளிர்கால பானத்துடன் உங்கள் காலையைத் தொடங்குங்கள்” என்று அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த காலை பானத்தின் செய்முறை மற்றும் நன்மைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த 'குளிர்கால காலை பானத்தை' வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
*2 கிளாஸ் தண்ணீர் (500 மிலி)
*7-10 கறிவேப்பிலை
*3 அஜ்வைன் இலைகள்
*1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
*1 டீஸ்பூன் சீரகம்
*1 தூள் ஏலக்காய் மற்றும்
1-இன்ச் இஞ்சி துண்டு (துருவியது).
செய்முறை
*அனைத்து மசாலாப் பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
*அந்த தண்ணீரை வடிகட்டவும், அவ்வளவுதான் உங்கள் குளிர்கால காலை பானம் தயார்.
“இதில் வெறும் 100 மில்லி குடித்தால் போதும். உடல் எடையைக் குறைக்க, அதில் அரை எலுமிச்சைப் பழத்தைச் சேர்க்கவும்” என்று டாக்டர் டிக்சா கூறினார்.
இந்த பானத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் ஆரோக்கிய நன்மைகளையும் ஆயுர்வேத நிபுணர் பகிர்ந்து கொண்டார்.
*கறிவேப்பிலை முடி உதிர்தல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது ஹீமோகுளோபினை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது என்று கூறினார்.
*நிபுணர்களின் கருத்துப்படி, அஜ்வைன் பொருள் வீக்கம், அஜீரணம், இருமல், சளி, நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது.
*சர்க்கரை கட்டுப்பாடு, கொழுப்பு இழப்பு, அமிலத்தன்மை, ஒற்றைத் தலைவலி, கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றிற்கு சீரகம் சிறந்தது என்று டாக்டர் டிக்சா கூறினார்.
*"ஏலக்காய், குமட்டல், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தோல் மற்றும் முடிக்கு நல்லது, ஏனெனில் இதில் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது என்று ஆயுர்வேத நிபுணர் குறிப்பிட்டார்.
*"அனைத்து குளிர்கால நோய்களையும் எதிர்த்துப் போராட இஞ்சி உதவுகிறது. அஜீரணம், வாயு, பசியின்மை மற்றும் எடை குறைப்பு ஆகியவற்றிற்கும் இஞ்சி உதவுகிறது" என்று அவர் விளக்கினார்.
ஆரோக்கியமாக இருக்க, வழக்கமான தேநீருக்கு மாற்றாக தினமும் காலையில் இந்த கலவையான பானத்தை குடிக்க பரிந்துரைத்தார்.
கர்மா ஆயுர்வேத மருத்துவமனை நிறுவனர் டாக்டர் புனீத் கூறுகையில், இந்த எளிய பொருட்கள் அன்றாட வாழ்க்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த பானம் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது, இது இறுதியில் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. “உதாரணமாக, அஜ்வைன் அசிட்டிக்கை குணப்படுத்தும். வீக்கம் மற்றும் வாய்வு ஆகியவற்றை எளிதாக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதன் சுவைக்கு கூடுதலாக, ஏலக்காய் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டது” என்று அவர் கூறினார்.
இந்த குளிர்கால காலை பானம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது என்று ஆயுர்வேந்த நிபுணர் கூறினார். இது "நிறைய ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டிருப்பதால் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்” என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.