2.4 lakh subsidised Tirupati Laddus sold in Andhra Pradesh on day-one
2.4 lakh subsidised Tirupati Laddus sold in Andhra Pradesh on day-one : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது வழிபாட்டிற்கு மார்ச் 24ம் தேதியில் இருந்து தடை நிலவி வருகிறது. பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்த மக்கள் ஆவலுடன் காத்திருந்தாலும், திருப்பதி கோவிலை இப்போது திறக்க இயலாது. பக்தர்களின் நிலையை உணர்ந்த திருப்பதி தேவஸ்தானம், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மற்றும் ஆந்திர மாவட்டங்களின் அனைத்து தலைநகர்களிலும் மானிய விலையில் திருப்பதி லட்டுகளை விற்க முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முதல் நாளாக ஆந்திராவில் இருக்கும் 12 மாவட்ட தலைநகரங்களில் லட்டுகள் ரூ. 25-க்கு (மானிய விலையில்) விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் 2.4 லட்சம் லட்டுகள் நேற்று மற்றும் விற்று தீர்ந்துள்ளது.
Advertisment
Advertisements
குண்ட்டூரில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் அங்கே விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்டுகள் விஜயவாடாவிற்கு மாற்றப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் திருமண மண்டபங்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையங்களில் திருப்பதி லட்டுகள் பக்தர்களின் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லட்டுகளை விற்பனை செய்ய அம்மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக தேவஸ்தானம் காத்திருக்கிறது.