5 minor girls from Kanpur shelter home found pregnant during covid19 test : கொரோனா வைரஸ் தொற்று அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெகுநாட்களாக வீட்டில் இருந்து பணியாற்றும் நபர்களுக்கு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.
Advertisment
உ.பி. மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வரூப் பகுதியில் அரசு சிறுவர் காப்பகம் ஒன்று நடத்தி வருகிறது. அவர்களை பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போது இதில் உள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சியான சம்பவம் ஒன்றையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதில் 5 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போது கர்ப்பம் தரித்த நிலையில் தான் இவர்கள் காப்பகத்திற்கு வந்தனர் என்று அவ்வரசு கூறியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அக்காப்பகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கருத்தரிந்த சிறுமிகள் ஐவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாவட்ட கலெக்டர் பிரம்மதேவ் கூறுகையில், இந்த 5 நபர்களும் பல்வேறு மாவட்டங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவால் அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வரும் போதே அவர்கள் கர்ப்பம் தரித்திருந்தனர் என்று கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை கேட்ட எதிர்கட்சியினர் மாநில அரசின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.