இந்தியாவில் அதிக அளவு கொரோனா வைரஸால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்ட்ரா. அங்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். தேவையான மருத்துவ பணியாளர்களை அம்மாநில அரசு கேரளாவிடம் பெற்றுக் கொண்டது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் உள்ள பார்க்கிங் லாட்டுகளும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் மலாட் பகுதியில் அமைந்துள்ள 19 மாடி கட்டிடத்தை நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளது தனியார் கட்டுமான நிறுவனம். 130 குடியிருப்புகளை கொண்ட அந்த கட்டிடத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, வீடுகளை வாங்கியவர்கள் குடியேறுவதற்கு வசதியாக உள்ள நிலையில், இந்த முடிவினை எடுத்துளது ஷீஜி ஷரன் என்ற நிறுவனம்.
Advertisment
Advertisements
இந்நிறுவனத்தின் தலைவர் மெஹூல் சங்க்வி தன்னுடைய பங்குதாரர்கள் அனைவருடனும் பேசி இந்த முடிவினை மேற்கொண்டுள்ளார். தற்போது ஒரு ஃப்ளாட்டுக்கு 4 நோயாளிகள் வீதம் 300 நோயாளிகள் அங்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிறுவந்த்தின் இந்த முடிவிற்கு பலரும் தங்களின் வரவேற்பினையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (சனிக்கிழமை நிலவரப்படி) 1,28,205 ஆகும், ஒரே நாளில் 160 நபர்கள் இறக்க, மொத்தமாக அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,954 ஆகும். மும்பையில் மட்டும் 3,559 நபர்கள் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.