இன்ஸ்டாகிராம் மூலம் மது விற்பனை செய்த ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு எம்.ஆர்.பி-யை விட மும்மடங்கு விலைக்கு அவர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
கொரோனா தொற்று கர்ப்பிணிக்கு பிறந்தது ஆண் குழந்தை – தாயும் சேயும் நலம்
பெங்களூரில் உள்ள விஜயநகரைச் சேர்ந்தவர் கிரண், வயது 28. இவர் கூகிள் மேம் உதவியோடு தனது வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்து வந்திருக்கிறார். ஆர்டர்களை டெலிவரி செய்ய வரும் போது, கலால் துணை ஆணையர் (மேற்கு மண்டலம்) பி.ஆர்.ஹிரேமத் மற்றும் இன்ஸ்பெக்டர் வனஜாக்ஷி தலைமையிலான குழுவால் கைது செய்யப்பட்டார்.
இந்த லால்டவுனில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் மிகப்பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, மும்மடங்கு விலைக்கு மது விற்பனை செய்து வந்துள்ளார் கிரண். இதனை இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தியும் வந்திருக்கிறார். மது சப்ளை செய்யும் போது, கையில் பணமாக பெறாத கிரண், தனது வாடிக்கையாளர்களிடம் ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்ய சொல்லி விடுவராம்.
கொரோனா நிவாரணம் நேரடியாக வழங்க தடை: கட்சிகள், அமைப்புகள் கண்டனம்
குறிப்பிட்ட லொகேஷன்னுக்கு வாடிக்கையாளர்களை வரச் சொல்லி, அதனை கூகிள் மேப் மூலம் ஃபாலோ செய்திருக்கிறார். அருகில் வந்ததும், மதுவை டெலிவரி செய்து விட்டு கிளம்பிவிடுவாராம். விஜயநகரில் கிரணின் ஸ்கூட்டர் அடிக்கடி ரவுண்ட் வருவது போலீசாருக்கு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கலால் அதிகாரிகள் அவரை பல நாட்கள் பின்தொடர்ந்து, இறுதியாக வட இந்தியர் ஒருவருக்கு மது சப்ளை செய்யும் போது, கிரணை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.