Best CM of the world trending in Twitter : சில நேரங்களில் ஏன் ட்ரெண்டாகிறது, எதற்கு ட்ரெண்டாகிறது என்றே தெரியாமல் ட்விட்டர் பக்கத்தில் நிறைய ட்ரெண்டாவது வழக்கம். ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் துவங்கி, படத்தி வசூல் வரை அனைத்தும் ட்ரெண்டாகும். ஆனால் படம் பார்க்கவே சகியாது. ஆனாலும் ரசிகர்கள் ட்விட்டரில் வெறித்தனமாக எதையேனும் ட்ரெண்ட் செய்து கொண்டு திரிவார்கள். கடந்த வாரம் சமுத்திர கனி, சமுத்திர பிஞ்சு, சமுத்திர காய் என நடிகர் சமுத்திர கனியை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாத சூழலில், யாரும் ஏடாகூடமாக விழிப்புணர்வு வீடியோ என்ற பெயரில் தவறான கருத்துகளையும் தெரிவிக்காத நேரத்தில் சிறந்த முதல்வர் யார் என்று ஒரு பக்கம் ட்விட்டர் இன்று ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த முதல்வர் யார், இந்த பெருங்கொள்ளை காலத்தில் யார் சிறப்பாக தங்களின் மாநில மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பது அவர் அவர் அறிந்ததே. எனவே பதிலை உங்களிடமே தந்துவிடுகிறோம். ஆனாலும் இன்று ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் சில உற்சாக ட்வீட்கள் உங்களுக்காக.
— frustration..............frustration ............. (@FrastrationF) April 10, 2020
Karnataka has the lowest coronavirus cases among the large states. We should appreciate BS Yediyurappa and his administration for this.#BestCMOfTheWorldpic.twitter.com/W3eEHBNpZK
ஆனா பாருங்க, ரொம்ப நேரம் பக்கத்துலையே இருந்து வர்ற ட்வீட்கள் அனைத்தையும் படித்ததால் தான் புரிந்தது, இது முழுக்க முழுக்க யோகியை உயர்த்தியும், உத்தவ் தாக்கரேவை இகழ்த்தியும் போடப்படும் பதிவுகள் என்று. மகாராஷ்ட்ரா மக்கள் தொகை Vs உ.பி. மக்கள் தொகை, மகாராஷ்ட்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் Vs உ.பி.யில் பாதிக்கப்பட்டவர்கள், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, உ.பி.யில் நிகழ்ந்த் உயிரிழப்பு என புட்டுபுட்டு வைத்து உத்தவை ஒரு வழியாக்கி உள்ளனர்.
ஆனாலும் இங்கே நாம் கூறிக் கொள்ள கடமைப்படுவது என்னவென்றால், மகாராஷ்ட்ராவில் இருக்கும் மும்பை இந்தியாவின் பொருளாதார/வர்த்தக தலைநகரம். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணிப்பர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். அவர்கள் அப்படி செல்லவில்லை என்றால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும். உள்நாட்டு உற்பத்தியிலும், ஜி.எஸ்.டியிலும் கணிசமாக நாட்டிற்கு திருப்பி அளிக்கும் வரி செலுத்தும் நபர்களை கொண்டிருக்கும் இடம் மகாராஷ்ரா. இதை பார்த்து தான் யாரும் வருத்தப்பட வேண்டுமே தவிர,அரசை குறை சொல்லும் நேரம் இது இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil