அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்றும் அதே தீர்ப்பில் சொல்லி இருந்தனர்.
இந்திய முஸ்லிம்களை வெளியேறச் சொன்னால், முதல் ஆளாக குரல் கொடுப்பேன்: ரஜினிகாந்த் பேட்டி
மேலும், ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
கோர்ட் விதித்த காலக்கெடு வரும் 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
5, 2020Today we take a historic step ahead towards building a grand Ram Temple in Ayodhya!
It was my honour to address the Lok Sabha on this subject, which is special to many.
I also applauded the remarkable spirit of the people of India.
This is what I said... pic.twitter.com/MJHDHnR3Xo
— Narendra Modi (@narendramodi)
Today we take a historic step ahead towards building a grand Ram Temple in Ayodhya!
— Narendra Modi (@narendramodi) February 5, 2020
It was my honour to address the Lok Sabha on this subject, which is special to many.
I also applauded the remarkable spirit of the people of India.
This is what I said... pic.twitter.com/MJHDHnR3Xo
இதுகுறித்து ஒரு அரிய நிகழ்வாக, ஜீரோ மணி நேரத்திற்கு முன் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் ‘சப்கா சாத் சபா விகாஸ்’ கொள்கையுடன் முன்னேறி வருவதாகக் கூறினார். மேலும், இந்தியாவில், இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர்கள், பார்சி அல்லது சமணர்களாக இருந்தாலும், அனைவரும் ஒரே குடும்பத்தின் ஒரு அங்கம். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். அயோத்தியில் விரைவில் ராமல் கோவில் கட்டும் பணி தொடங்கும்.
பள்ளியில் தேசத்துரோகக் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை
அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரபிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அயோத்தியில் ஒரு பெரிய ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம் என கூறினார்.
இதையடுத்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.