CBI Vs CBI : மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்கள். ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
ராகேஷ் அஸ்தானா மொயின் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் வழக்கு ஒன்றில் குற்றவாளியான சனா பாபுவை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்ற புகார் எழவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் ராகேஷ் அஸ்தானா, தன்னுடைய முதன்மை இயக்குநரான அலோக் வர்மாவும் லஞ்சம் வாங்கினார் என்று புகார் கூறினார். இந்நிலையில் இருவரையும் பிரதமர் அலுவலகம் அழைத்து நேரில் அறிக்கை சமர்பிக்க பிரதமர் உத்தரவிட்டார். மேலும் படிக்க : அலோக் வர்மா விசாரணை செய்த வழக்குகள் ஒரு பார்வை
CBI Vs CBI : அறிக்கை தாக்கல் செய்த மத்திய ஊழல் தடுப்பு அணையம்
பின்பு இருவரையும் அவர்களின் பணியில் இருந்து நீக்கிவிட்டு, ஒடிசாவைச் சேர்ந்த நாகேஷ்வர ராவ்விற்கு இயக்குநர் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதம அலுவலகம் அறிவித்தது. கட்டாய விடுப்பினை ஏற்க இயலாது என்று அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
அக்டோபர் 26ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.கே. கவுல், ஏ.எம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணை செய்தது. அலோக் வர்மாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற சூழலில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மத்திய அமைச்சகத்தின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என்று அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன் வாதாடினார்.
அலோக் வர்மாவின் வழக்கினை பார்வையிட்ட நீதிபதிகள், அலோக் வர்மா மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து 10 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையினை சமர்பிக்க மத்திய ஊழல் தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிட்டார் ரஞ்சன் கோகாய். அதுவரை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நாகேஷ்வர ராவ் எந்த வழக்கினையும் விசாரிக்கவோ, முடிவுகள் மேற்கொள்ளவோ கூடாது என உத்தரவிட்டார்.
நவம்பர் 16ம் தேதி விசாரணை
அந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் அலோக் வர்மா மீதான லஞ்ச புகார் குறித்த அறிக்கைகளை சமர்பிக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அலோக் வர்மாவிற்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம். இது தொடர்பான விசாரணை நவம்பர் 16ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.