Coronovirus in India : சி.பி.எஸ்.இ தேர்வுகள் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14-ம் தேதி வரை நடக்கின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சிபிஎஸ்இ தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தொடர்கின்றன.
இன்றைய செய்திகள் Live : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – கமல் கட்சி நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
இதற்கிடையே மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அந்த பொறுப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் ஏற்குமா என்று கேட்டு மாணவர்கள் பலர் ட்வீட் செய்யத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான கேள்விகளுக்குப் பிறகு, மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க, அனைத்து சிபிஎஸ்இ போர்டு தேர்வு மையங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Conduct of Boards examination is a policy matter which is decided by the Competent Authority only in the interest of CBSE Schools' students of Class X and XII. However appropriate precautions are taken at the examination centre to avoid undesirable infection.
— CBSE HQ (@cbseindia29) March 16, 2020
”வாரியங்கள் தேர்வு நடத்துதல் என்பது ஒரு கொள்கை விஷயமாகும். இது சிபிஎஸ்இ பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காக, தகுதி வாய்ந்தவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு தேர்வு மையத்தில் தகுந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்று பதிலளித்து ட்வீட் செய்திருந்தது சிபிஎஸ்இ நிர்வாகம்.
ரயில், பஸ், மெட்ரோக்களில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – படத்தொகுப்பு
இதற்கிடையே, பிப்ரவரி கடைசி வாரத்திலும் மார்ச் முதல் வாரத்திலும் டெல்லியில் வெடித்த வன்முறையைக் கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கு வெளியிடப்பட்ட புதிய தேர்வு தேதிகளின்படி, சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் மார்ச் 30 க்குள் முடிவடைவதற்கு பதிலாக ஏப்ரல் 14 வரை தொடரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.