காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
23 பேர் கடிதத்திற்கு பதிலடி: சோனியா தலைமைக்கு ஆதரவாக குவிந்த கடிதங்கள்
பாஜக கட்சியோடு ஏற்பட்ட இணக்கத்தால் 23 காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்தாக வந்த செய்தி, காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய குழப்பத்தை எற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், கபில் சிபல் தனது ட்விட்டரில்," இத்தகைய தகவல் தவறானது என்று ராகுல் காந்தி தன்னிடம் தனிப்பட்ட முறையில் மறுப்பு தெரிவித்ததால், எனது அதிர்ப்தியை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். சில மணி நேரங்களிலேயே, ராகுல் காந்தி அத்தகைய கருத்தை ஒருபோதும் சொல்லவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெளிவுபடுத்தினார்.
கட்சியில் ஒரு பிரிவினர், ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், 'கட்சியில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையான தலைமை தேவை' என, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு, 'தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை; நாம் அனைவரும் கூடி புதிய தலைவரை தேர்வு செய்வோம்' என, சோனியா தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் சமகால வரலாற்றில் இந்த நெருக்கடி ஏன் மாறுபட்டது?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
காங்கிரஸ் கட்சிக்கு இளமைத்துடிப்புள்ள தலைமை வேண்டும் என்று சிலரும், சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கம்
காங்கிரஸ் செயற்குழுவில் 4 முதலமைச்சர்கள் உட்பட 52 பேர் பங்கேற்பு
"கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமை இல்லை. கட்சியின் உள் விவகாரங்கள் ஊடகங்கள் மூலமாக வெளியில் தெரிவிக்க முடியாது. கொரோனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது"
காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார்
- காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
Ghulam Nabi Azad: 'Let me make it very clear that Rahul Gandhi at no point of time has said, either outside or in the CWC meeting, that the letter was written at the instance, or at the behest or in collusion with the BJP.....' @IndianExpress #CWCMeet #Congress
— Manoj C G (@manojcg4u) August 24, 2020
பாஜக கட்சியோடு ஏற்பட்ட இணக்கத்தால் 23 காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர் என்று ராகுல் காந்தி ஒருபோதும் சொல்லவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெளிவுபடுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் உமா பாரதி, "காந்தி-நேரு குடும்பத்தின் இருத்தலே கேள்வியாக்கப்பட்டுள்ளது. அவர்களின் அரசியல் ஆதிக்கம் முடிந்துவிட்டது. காங்கிரசின் கதை முடிந்தது .. எனவே யார் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல ... எந்தவொரு அந்நிய சக்திகள் இல்லாத உண்மையான 'சுதேசி' காந்திக்கு காங்கிரஸ் திரும்ப வேண்டும் " என்று தெரிவித்தார்.
கட்சித் தலைமைக்கு உங்களின் உடல்நலம் ஒத்துழைக்கவிட்டால், கட்சியின் உயர் பதவியை ஏற்கும்படி ராகுல் காந்தியை சமாதானப்படுத்துங்கள் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சோனியா காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும். ஒருவேளை, உங்கள் உடல்நலம் முழு அர்ப்பணிப்புக்கு அனுமதிக்காது என்று நீங்கள் நினைத்தால், ராகுல் காந்தி பொறுப்பை ஏற்க சமாதானம் செய்ய நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சி குறித்த தனது கருத்தை பதிவு செய்தபோது , அவரை பாஜகவுடன் இணைத்து பேசினர். தற்போது, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்ற தலைவர்களுக்கும் அதே போன்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இத்தகைய ஒரு கட்சியைக் காப்பாற்ற யாராலும் முடியாது "என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
Was informed by Rahul Gandhi personally that he never said what was attributed to him .
I therefore withdraw my tweet .
— Kapil Sibal (@KapilSibal) August 24, 2020
பாஜக- வுடன் இனைந்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுவதாக, ராகுல் காந்தி கூறியதாக வந்த தகவலை, கபில் சிபலிடம் தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து, கபில் சிபல் தனது முந்தைய ட்வீட்டை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
Sh. Rahul Gandhi hasn’t said a word of this nature nor alluded to it.
Pl don’t be mislead by false media discourse or misinformation being spread.
But yes, we all need to work together in fighting the draconian Modi rule rather then fighting & hurting each other & the Congress. https://t.co/x6FvPpe7I1
— Randeep Singh Surjewala (@rssurjewala) August 24, 2020
ராகுல் காந்தியின் "பாஜக" கருத்து குறித்து, கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "ராகுல் காந்தி தவறாக எதையும் சொல்லவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
"ராகுல் காந்தி அத்தகைய கருத்தை பிரதிபலிக்கும் எந்த வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஊடகங்களின் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். மோடி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நம்மை நாம் காயப்படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும்"என்று ட்வீட் செய்தார்.
கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள், பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், அதற்கு ஆதாரம் இருந்தால் ராகுல் காட்டட்டும் என்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களிடம் ராகுல் காந்தி, சோனியா காந்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
#CWCMeet
Rahul Gandhi questions the timing of the letter written by 23 senior leaders. Says letter written at a time when the party was battling a crisis in Rajasthan and Congress interim President Sonia Gandhi was unwell. @IndianExpress #Congress— Manoj C G (@manojcg4u) August 24, 2020
காங்கிரஸ் கட்சிக்கு தலைமைப்பொறுப்புக்கு சோனியா காந்தி பெயரை சிலரும், ராகுல் காந்தி பெயரை பலரும், காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைமைப்பொறுப்பிற்கு வர வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தாான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா காந்திக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Mrs Gandhi and Rahul ji have shown what it means to sacrifice for the greater good of the people and the party.Its now time to build consensus and consolidate.
Our future is stronger when we’re united. Most Congress workers would like to see Rahul ji take over and lead the party— Sachin Pilot (@SachinPilot) August 23, 2020
Jammu And Kashmir Pradesh Congress Committee extends support to Rahul Gandhi to be the next party president "if there is any change in Congress President". pic.twitter.com/OQbRupbYzu
— ANI (@ANI) August 24, 2020
This is my request letter which i have sent to @INCIndia President Madam Sonia Ji and Thiru @RahulGandhi Ji. pic.twitter.com/DBlJHgpqa6
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) August 23, 2020
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும்.கோடிக்கணக்கான இந்திய மக்களும்,காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிரார்கள்
— KS_Alagiri (@KS_Alagiri) August 23, 2020
சோனியா காந்தி தான் தலைவராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் நாம் இருக்கிறோம். எனவே சோனியா காந்தி தலைவர் பதவியில் தொடர வேண்டும். ஒருவேளை அவர் தீர்மானமாக முடிவெடுத்துவிட்டால், ராகுல் காந்தி முன்வந்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மன்மோகன் சிங் அல்லது அந்தோணியை, கட்சி தலைவராக்க வேண்டும் என, சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, சோனியாவுக்கு, காங்., மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்துக்கு, கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights