Advertisment

17 மணி நேரம் வேலை; தினம் 100 பரிசோதனை - ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு ராயல் சல்யூட்

வைரசை நாம் காண முடியாது. எனவே அவற்றின் மரபணுக்கள் ரத்தத்தில் உள்ளதா என்பதை கண்டறிய முயற்சி செய்யவேண்டும். முதல் பரிசோதனை, கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ரத்தத்தில் கலந்துள்ளதா என்று கண்டறிவதற்கு செய்யப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona testing , contact tracing

Corona testing , contact tracing , Karnataka covid-19 contact tracing

இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுவிட்டன. வழக்கமாக காலை 9.30 மணி முதல் 7 மணி வரை பணிநேரமாகும். அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் காலை 7 மணி முதல் அடுத்த நாள் காலை 2 மணி வரை கூட பணி நீடிக்கிறது. இது அங்குள்ள 50 பணியாளர்களுக்கும் பொருந்தும்.

Advertisment

டெல்லி சிவில் லைன் கேம்பசில் உள்ள தேசிய நோய் தடுப்பு மையத்தில் ஒரு மருத்துவரை கூட வெளியில் பார்ப்பது அரிதான காட்சியாகிவிட்டது. குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து நாளொன்றுக்கு 17 மணி நேரம் மைக்ரோபயாலஜி ஆய்வகங்களிலேயே பணி செய்துகொண்டிருக்கிறார்கள். டாக்டர் பார்த்தா ரக்ஷித் காலை இடைவேளையில் கூட வெளியே வருவதில்லை. துணை இயக்குனர், கொரோனாவை எதிர்த்து போராட ஆய்வகத்திற்கு தேவையான உயர்தர கருவிகளை வரவழைப்பதற்காக அதன் தயாரிப்பாளர்களிடம் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்.

தனிமைப்படுத்தப்படும் இந்திய தலைநகர்... எல்லைகள் மூடப்படுகிறது!

ரக்ஷித் தலைமையிலான ஆய்வகம் நாட்டில் உள்ள 111 ஆய்வகங்களில் ஒன்றாகும். சந்தேகத்தின் அடிப்படையில் ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைகள் செய்யப்படுகிறது. தற்போது டெல்லி, உத்திரபிரதேசம், ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்படும், 100க்கும் மேற்பட்ட ஆய்வுகள் ஒரு நாளில் இங்கு செய்யப்படுவதாக அவர் கூறுகிறார்.

வைரசை நாம் காண முடியாது. எனவே அவற்றின் மரபணுக்கள் ரத்தத்தில் உள்ளதா என்பதை கண்டறிய முயற்சி செய்யவேண்டும். முதல் பரிசோதனை, கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ரத்தத்தில் கலந்துள்ளதா என்று கண்டறிவதற்கு செய்யப்படுகிறது. இதுதான் நோய் பாதிப்பு ஆய்வு (Screening) பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. அடுத்த பரிசோதனையில் நாங்கள் அந்த வைரஸ், புதிய கொரோனா வைரசின் மரபணுக்களை கொண்டுள்ளதா என்பதை கண்டறிய முயற்சி செய்வோம். முதல் பரிசோதனை பாசிடிவாக இருந்தால் மட்டுமே நாங்கள் இரண்டாவது பரிசோதனை செய்வோம் என்று அவர் கூறுகிறார்.

தேசிய நோய் தடுப்பு மைய கட்டிடத்தின் கீழ் தளத்தில், சிறிய டப்பாக்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து பரிசோதனை கூடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வெளியாட்கள் நுழைவதற்கு கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுவிட்டன. வழக்கமாக காலை 9.30 மணி முதல் 7 மணி வரை பணிநேரமாகும். அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் காலை 7 மணி முதல் அடுத்த நாள் காலை 2 மணி வரை கூட பணி நீடிக்கிறது. இது அங்குள்ள 50 பணியாளர்களுக்கும் பொருந்தும். எங்கள் ஹெப்படிடிஸ் தொடர்பான வேலைகள் அனைத்தும் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டதாக டாக்டர் ரக்ஷித் கூறுகிறார்.

44 வயதான 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையானவர். அவரது மனைவியும் ஒரு நோயியல் நிபுணர். மருத்துவமனையில் இருந்து எண்ணிலடங்கா கேள்விகள் கேட்டு அழைப்பு வந்தவுடனும், முடிவுகளை விரைவாக தெரிந்துகொள்வதற்கான தேவை இருந்ததாலும், அவரும், அவருடன் பணி செய்பவர்களும், அவர்களின் குடும்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களைக்கூட தவிர்த்துவிட்டு பணிசெய்து வருவதாக கூறுகிறார். முதல் சோதனைக்கு குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரமாகிறது. அது தவறில்லாமல் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள மறுமுறை செய்து பார்க்க வேண்டியுள்ளது. இதனால், ஒரு ஆய்வறிக்கைக்கு 8 முதல் 9 மணி நேரம் செலவாகிறது. ஜனவரி மூன்றாவது வாரத்தில், இயக்குனர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, நமது ஆய்வு மையம் கோவிட் – 19ஐ எதிர்கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளதா என்று கேட்டார். நான் உடனடியாக ஆமாம் என்று கூறினேன். அன்று முதல் மற்ற வேலைகள் அனைத்தும் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டது. எங்களுக்கு விடுமுறை கிடையாது. திட்டமிட்ட விடுப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. என்னுடன் பணிசெய்த ஒருவரின் வீட்டில் பூஜை நடந்தது. அதற்காக அவர் விடுப்பில் இருந்தார். அதை விட்டுவிட்டு உடனடியாக வருமாறு கூறிவிட்டேன். அவரும் உடனே ஓடி வந்தார். எங்கள் குடும்பத்தினர் எங்களை நினைத்து பெருமைகொள்வது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எனது 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வைரஸ் குறித்தும், அப்பா அதனுடன்தான் வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியும். நாங்கள் எந்த புகாரும் கூறவில்லை என்று அவர் கூறுகிறார்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ரக்ஷித்துடன் பணிபுரியும் சுவாச நோய்கள் ஆய்வக தலைவர் சிம்ரித்தா சிங் கூறுகையில், எனது உறவினரின் திருமணத்தை கூட நான் தவிர்த்துவிட்டேன். இதனால் அவர்களுக்கு கூட வருத்தம் இருந்தது. ஆனால் இது கடினமான நேரம். நான் காலை 8 மணிக்கு பணிக்கு வருகிறேன். இரவு 10 மணி வரை கூட இங்கேயே இருக்க நேரிடுகிறது. சிங் 12 ஆண்டுகளாக இம்மையத்தில் பணிபுரிகிறார். பன்றிக்காய்ச்சல் நேரத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராவார். பொதுவாக சளிக்காய்ச்சல் ஏற்படும் நேரங்களில், அவரின் நாட்களும் முழுவதும் பணியிலேயே கழியும் என்கிறார். ஆனால் வழக்கத்தைவிட தற்போது கூடுதலாக பணி செய்வதாக கூறுகிறார். இரவில் கண் விழித்து, அதிகாலையில் பணிக்கு வந்து, தாமதமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்று டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவகல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் கூறுகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் - முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு

ரக்ஷித், இரண்டு தேசிய ஹெப்பாடிடிஸ் திட்டங்களின் பொறுப்பாளர், ஆண்டு முழுவதும் பரபரப்பாகவே இருக்கும் நபர்தான். அவரது ஆய்வகம் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் 33 நோய்களை கண்காணிக்கிறது.

ஆனால், அவரே இப்போது வாழ்க்கை கொரோனா வைரசுடனே ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார். எங்கள் வளர்ச்சிக்கு உதவும் கூட்டாளிகள் மூலம் நாங்கள் ஒரு ஆவண முறையை பின்பற்ற உள்ளோம். அது விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அது எங்கள் செயல்திறனை மேலும் வளர்க்க உதவும் என்று நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

இக்கட்டுரையின் ஆசிரியர் ABANTIKA GHOSH. இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்.

தமிழில்: R.பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment