Advertisment

’கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பாருங்கள், தொற்றை அல்ல’ - மருத்துவ வல்லுநர்கள்

வெளிப்படையான சமூக பரவலை கொண்ட மும்பை, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில், பாஸிட்டிவ் தொற்றுகளை கண்டறிந்து, சோதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
’கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பாருங்கள், தொற்றை அல்ல’ - மருத்துவ வல்லுநர்கள்

அபந்திகா கோஷ்

Advertisment

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வருவதால், அரசாங்கத்திற்குள்ளும் வெளியேயும்  இருக்கும் தொற்றுநோயியல் நிபுணர்கள், ’இப்போது முக்கியமாக பார்க்க வேண்டியது இறப்பு எண்ணிக்கையை தான்’ என்கிறார்கள். இது தொற்றுநோயின் போக்கையும், அதைச் சமாளிப்பதில் மாநில அரசுகளின் வெற்றியையும் குறிக்கிறது.

’கல்வி, சுயமரியாதை கட்டாயம் வேண்டும்’: கமல் – ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்!

அடுத்த வாரம், ஜூன் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் உரையாடுகிறார். அதிக தொற்று எண்ணிக்கைகளையும், இறப்பு எண்ணிக்கைகளையும் கொண்ட மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை இரண்டாவது நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதாரணமாக, மே 11 அன்று 87 இறப்புகள் இருந்த நிலையில், ஒரு வாரம் கழித்து மே 18 அன்று 157 ஆக உயர்ந்தது. 140-160 வரம்பில் மீண்டும் வேகமடைந்தது. மே 31 அன்று, 265 இறப்புகளாக இருந்தன. ஜூன் 12 அன்று, இந்த எண்ணிக்கை ஒரு புதிய உயர்வைத் தொட்டது. 396 இறப்புகள். இந்தியாவில் மொத்த தொற்றுகள் 2,97,535.

"நாளையை விட உயர்ந்தது இல்லை" என தொற்றுநோயியல் நிபுணரும், சி.எம்.சி வேலூரின் முன்னாள் முதல்வருமான, டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில், அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் இறப்புகள் குறித்து கூறினார். பழைய நடைமுறையான பலரை சோதித்து, தனிமைப்படுத்துவதற்கு பதிலாக, ஆக்சிஜன் படுக்கைகள் போன்றவற்றைத் தயாரிப்பதன் மூலம் இறப்புகளைத் தடுக்கலாம், என்பதே அவரது ஆலோசனை.

"பல நோய்களுக்கு துணை நோய்த்தொற்றுகள் உள்ளன, பெரும்பாலான மக்கள் சிகிச்சையின்றி தன்னிச்சையாக குணமடையும் போது நாங்கள் அவற்றை 'தொற்றுகள்' என்று அழைக்க மாட்டோம்... இங்கே நாங்கள் கோவிட் வழக்குகளை கணக்கிடுகிறோம், எண்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. அதேசமயம் பல நாடுகள் என்ன செய்கின்றன என்று கவனிக்கிறோம். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்போது மருத்துவமனைக்கு வாருங்கள், கார் பார்க்கில் ஆக்ஸிஜனை சரிபார்த்து அழைப்பு விடுங்கள் என்கிறார்கள். வெளிப்படையான சமூக பரவலை கொண்ட மும்பை, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில், பாஸிட்டிவ் தொற்றுகளை கண்டறிந்து, சோதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த முழு விஷயமும் முடிந்தவுடன், 60 கோடி பேருக்கு தொற்று ஏற்படும். எண்ணுவது எங்களுக்கு பெரிதும் உதவாது, இது மக்களை பயமுறுத்தவே செய்யும். இதை மாற்ற விரும்பினால், நீங்கள் படுக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். தொற்றுகள் மோசமடைவதைத் தடுக்க வேண்டும், அப்போது அனைத்தும் சிறப்பாக வரும்” என்கிறார் டாக்டர் முலில்.

கோவிட் தொற்றில் இந்தியாவின் இறப்பு விகிதம் 2.86%. சர்வதேச அளவை விட மிகக் குறைவு. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஐ.சி.எம்.ஆரின் முதல் கட்ட ஆன்டிபாடி சோதனைகளின் முடிவுகளால், தொற்று இறப்பு விகிதம் இன்னும் 0.08% ஆகும். புதிய நிலைமை புதிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

தொற்று நோய்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு தொற்றுநோயியல் நிபுணர், “டெல்லி மற்றும் மும்பையில், தொடர்புத் தடமறிதல் மற்றும் சோதனை பற்றி ஏன் இன்னும் பேசுகிறீர்கள்? அந்த நிலை நீண்ட காலமாகிவிட்டது. நோயைப் பெற்று, தெரியாமல் மீளும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை சோதிப்பதில் என்ன பயன்? மறுபுறம், சுவாசக் கஷ்டம் உள்ளவர்கள், தான் மோசமடையாமல் இருக்க விரைவாக சிகிச்சையளிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ள எவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும், எப்போது மருத்துவமனைக்கு வர  வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுங்கள். மரணங்களைத் தடுப்பதே இப்போது முன்னுரிமை” என்றார்.

Tamil News Today Live : அதிகரிக்கும் கொரோனா தொற்று… அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை!

இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் நேர்மறை வழக்குகளின் மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தற்போது இது 49.47% ஆக உள்ளது. மொத்தம் 1,47,194 நபர்கள் குணப்படுத்தப்பட்டு, 1,41,842 நபர்கள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,166 நபர்கள் COVID-19-லிருந்து குணமடைந்துள்ளனர். இரட்டிப்பு வீதம் / நேரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. பூட்டுதலின் தொடக்கத்தில் 3.4 நாட்களில் இருந்து தற்போது 17.4 நாட்களாக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆங்கிலத்தில் படிக்க - Experts say watch Covid-19 death toll, not cases; PM Modi to talk to CMs next week

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment