Coronavirus lockdown migrant crisis UP government accepts Congress request
Coronavirus lockdown migrant crisis UP government accepts Congress request : கொரோனா வைரஸ் காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை சிறப்பு திட்டங்கள் மூலம், இலவசமாக இந்தியா அழைத்து வந்தனர். ஆனால் நம்முடைய நாட்டில் சாப்பாட்டிற்கு வழியின்றி சிக்கித் தவிக்கும் மக்களை இப்படி சிரமத்திற்கு ஆளாக்குவதா என்று கேள்வி எழுப்பினார் சோனியா காந்தி. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு ஆகும் செலவை காங்கிரஸ் ஏற்பதாகவும் கூறியது.
உத்திர பிரதேசத்திற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினார் ராகுல் காந்தி. இந்நிலையில் தற்போது புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகளை இயக்க விரும்புகிறோம் என்று உ.பி. அரசிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக உ.பி. அரசுக்கு கடிதம் எழுதிய பிரியங்கா காந்தி, ”இங்கே சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர் செல்வதற்காக 1000 சிறப்பு பேருந்துகளை காசியாபாத்தின் காசிப்பூர் எல்லையில் இருந்தும் நொய்டா எல்லையில் இருந்தும் இயக்க விரும்புகிறோம். இதற்கான முழு செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கடிதத்தை பரிசீலனை செய்து உ.பி. அரசு, பிரியங்கா காந்தியின் வேண்டுகோளுக்கு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக பிரியங்கா காந்திக்கு, இயக்கப்பட இருக்கும் பேருந்துகள், அதன் ஓட்டுநர்கள் குறித்த முழு விபரங்களை உடனே அளிக்க வேண்டும் என்று உ.பி. மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அவஸ்தி கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “