/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-08T072815.734.jpg)
Covid-19 Cases Update: தமிழகத்தில் சென்னை நீங்கலாக, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று ( மே7) முதல் திறக்கப்பட்டன. முதல்நாளிலேயே, ரூ.170 கோடி அளவிற்கு மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 49,391 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 2958 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் பாதித்தவர்களில் 14,183 பேர் இதுவரை குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1457 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த நோய் பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சக குடிமக்கள் அனைவருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள புத்த பகவானைப் பின்பற்றுபவர்களுக்கும் குடியரசுத் தலைவர் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். " கொரோனா என்ற தொற்றின் வடிவத்தில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், உதவிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்க நாம் முன்வருவதன் மூலம் புத்த பகவான் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். பக்தி மயமான இந்தப்பண்டிகை புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்ற நமக்கு ஊக்கமளிப்பதுடன், நம்மிடையே நல்லிணக்கத்தைப் பேணும் சிந்தனையை வலுப்படுத்தட்டும்" என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற முக்கிய செய்திதிகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.
Live Blog
Coronavirus Updates: கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழர்களுக்கு ஒரு கடிதம் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களைவிட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில் அரசு தற்போது திறந்துவிட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும் என்று எச்சரித்துள்ளார்.
தமிழர்களுக்கு ஒரு கடிதம். #தாங்குமாதமிழகம்? pic.twitter.com/SHZsXEB5zZ
— Kamal Haasan (@ikamalhaasan) May 7, 2020
டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் பலரிடம் ஆதார் இல்லை என்பதால் அதற்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது. சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல ஒரு மணி நேரத்தில் பாஸ்கள் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவம் மற்றும் மரணங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதிச் சீட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் விஷவாயு பாதிப்பு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஷவாயு சம்பவம் தொடர்பாக மத்திய அரசும் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு்ளளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் நேரிட்ட வாயுக்கசிவில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல்; சிகிச்சை பெறுவோர் பூரண குணமடைய பிரார்த்திப்பதாக அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வெப்பச்சலனம், மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கோவை, நீலகிரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு வருமானம் இல்லாத இந்த நேரத்தில், டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் என்ன? என்று முதல்வர் பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு வருமானம் இல்லாத இந்த நேரத்தில், டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் என்ன?@CMOTamilNadu https://t.co/sK2zbWhQqH
— Vijayakant (@iVijayakant) May 7, 2020
Tamil Nadu: A group of women protest in Pykara area of Madurai district against state govt orders to open liquor shops in the state amid #CoronavirusLockdown. pic.twitter.com/8NGHAYQ2Vw
— ANI (@ANI) May 7, 2020
கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே மதுக் கடைகளை அரசு திறந்ததற்கு எதிராக மதுரை பைகார பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
#WATCH Kerala: Police resort to mild lathicharge in Koothattukulam area of Ernakulam District to disperse migrant labourers who were protesting demanding they be sent back to their native places. pic.twitter.com/b3O1MMZyEd
— ANI (@ANI) May 7, 2020
தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்டம் கூத்தட்டுக்குளம் பகுதியில் போராட்டம் நடத்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கேரள காவல்துறை லேசான லத்தி சார்ஜ் செய்தது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்தனர். அவர்களில் சுமார் 75% சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என்று Centre for Monitoring Indian Economy நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில், அதிகம் பாதிப்படைந்த மாநிலமாக தமழ்நாடு உள்ளது.
கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைவாக உள்ளது என்று கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த தொற்று பரவல்நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது என்று தெரிவித்த அவர், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
சாதாரண கைபேசிகள், சாதாரண தொலைபேசிகள் வைத்திருப்பவர்களையும் ஆரோக்கிய சேது திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ‘’ஆரோக்கிய சேது ஊடாடு குரல் பதில் முறை -ஐவிஆர்எஸ்’’ செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சேவை நாடு முழுவதும் கிடைக்கிறது. கட்டணம் இல்லாத இந்தச் சேவையில், மக்கள் 1921 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்களது ஆரோக்கியம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்படும்.
கேட்கப்படும் கேள்விகள் ஆரோக்கிய சேது செயலியுடன் சேரக்கப்படும். மக்கள் கூறும் பதில்களின் அடிப்படையில், அவர்களது ஆரோக்கிய நிலைமை குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும். மேலும் அவர்களது நடமாட்டத்தைப் பொறுத்து, அவர்களது ஆரோக்கியம் பற்றி எச்சரிக்கை தகவல்கள் வரும்.
2020, தொற்று மற்றும் தடுப்பு கட்டுப்பாடு அவசர சட்டத்திற்குஉத்திர பிரேதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றை வேண்டுமென்றே (COVID-19) பரப்பி மரணம் ஏற்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை தண்டனைகள் கடுமையாக்கப் பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை தான் தொற்று அதிகமாக பரவியதற்கான காரணம் என தெரிந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி வரை, அங்கு 1,74,828 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை விட 1.5 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவிலேயே, 1,82,884 பேருக்கே சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவரங்களுக்கு கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்தது ஏன்?
மது விற்பனையால் மாநிலங்களுக்கு எவ்வாறு வருவாய் கிடைக்கின்றன?
இந்தியாவில் குஜராத், பீகார் ( பூரண மதுவிலக்கு அமலில் உள்ளன) மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மது தயாரிப்பு மற்றும் விற்பனைகளுக்கென்று பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், இந்த வரிகள் மட்டுமல்லாது மதிப்பு கூட்டப்பட்ட ( வாட்) வரியும் விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்தல், போக்குவரத்து செலவு, நிறுவன பதிவு கட்டணம் என பல்வேறு வழிகளில் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
மேலும், விவரங்களுக்கு: ஊரடங்கு நேரத்திலும் மதுவிற்பனைக்கு ஏன் அனுமதி? : மாநிலங்கள் இதன்மூலம் பயன் அடைகிறதா?.
திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம் என்று மு. க விடுத்த அழைப்பை ஏற்று இன்று கூட்டணி கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
— M.K.Stalin (@mkstalin) May 7, 2020
நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.
'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ என முழங்குவோம்!
— M.K.Stalin (@mkstalin) May 7, 2020
நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களோடு எதிர்பை பதிவு செய்து வருகிறார்.
#coronavirus பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பிய சென்னை காவல் துணை ஆணையருக்கு குடியிருப்பு வாசிகள் கைதட்டி உற்சாக வரவேற்பளித்தனர். #IndiaFightsCorona #COVID19 @chennaipolice_ @aravindhanIPS @ArjunSaravanan5 @CCTPolice_Alert @airnews_Chennai @DDNewsChennai pic.twitter.com/aC0JkOLZoS
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 7, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பிய சென்னை காவல் துணை ஆணையருக்கு குடியிருப்பு வாசிகள் கைதட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
Remembering the noble teachings of Lord Buddha. https://t.co/nQWoa5qNX0
— Narendra Modi (@narendramodi) May 7, 2020
பிரதமர் நரேந்திர மோடி புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். புத்தர் என்பது இந்தியாவின் உணர்தல் மற்றும் தன்னை - உணர்தல் ஆகிய இரண்டின் அடையாளமாகும். இந்த சுய-உணர்தலுடன், மனிதநேயம் மற்றும் உலக நஇந்தியா தொடர்ந்து செயல்படுகிறது என்று கூறினார்.
ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights