உலகம் முழுவதும் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், மருத்துவமனையில், தன்னுடைய உயிரை குறித்தும் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் உழைத்து வருபவர்கள் மருத்துவ ஊழியர்கள் தான். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்பவர்கள் முதற்கொண்டு மருத்துவமனையை சுத்தமாக வைக்க உதவும் துப்புரவு தொழிலாளர்கள் முதற்கொண்டு அனைவரும் இந்த நேரத்தில் வணங்கதக்கவர்கள் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
இரவு பகலாக இவர்கள் பார்க்கும் சேவையில் தான் இன்று உலகம் நிம்மதியை சுவாசித்து தூங்கிக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் பல்வேறு இடங்களின் மருத்துவர்கள் எவ்வாறு இந்த நோயை கையாளுகின்றார்கள் என்பதை இந்த புகைப்பட தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும் படிக்க : பேரழிவில் இருந்து மீண்டு வரும் வுஹான்… பெரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான்!
அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள், உறவுகள், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தும் இருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி சேவைக்கு முதலிடம் தரும் இவர்களுக்கு ராயல் சல்யூட் வைப்பதைக் காட்டிலும் நம்மால் என்ன செய்துவிட முடியும். இவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இந்த ட்ராமாவில் இருந்து அவர்கள் பரிபூரணமாக வெளி வர நாம் வேண்டிக் கொள்வோம்.
மேலும் படிக்க : கொரோனா பரிதாபங்கள் : முதல்ல உங்ககிட்ட இருந்து தான் ”கொரானாவை” காப்பாத்தனும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.