Advertisment

6 மாநிலங்கள், 9 முக்கிய பெருநகரங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இதன் தீவிரத்தன்மை இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. உலக சுகாதர மையம் இதன் தீவிரத்தன்மை மிகவும் லேசானதாக இருக்கும் என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Covid-19 curve climbs in six states

Covid-19 curve climbs in six states, 9 key urban areas : கடந்த நான்கு நாட்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று வருகின்ற ஆண்டிற்கான அதிகப்பட்ச விழிப்புணர்வு வழங்குவதை குறித்து முடிவுகளை எடுக்க மத்திய அரசுக்கு வழி வகை செய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று பல நகர்ப்புற மாவட்டங்களில் இருந்து பதிவாகும் அதிகரிப்பு மிகவும் அதிகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் தொற்று உயர்வின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறியது.

Advertisment

வாராந்திர நோய் தொற்று பதிவு மற்றும் பாசிடிவ் விகிதங்கள் அடிப்படையில் மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கவலை அளிக்கும் மாநிலங்களாவும், 9 நகர்புற மாவட்டங்களை கவலை அளிக்கும் பகுதிகளாகவும் அறிவித்துள்ளது மத்திய அரசு. தொற்றுநோய் சூழ்நிலையில் மாறிவரும் நிலை உள்ளது என்று இந்த தரவுகள் குறித்து தேசிய கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால் அறிவித்தார்.

தேசிய அளவில் 7000 தொற்றுகள் இருந்த நிலையில் இன்று எண்ணிக்கை உயர்ந்திருப்பதை பார்க்கின்றோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை வெளிப்படையாக தெரிகிறது. சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. வழக்குகள் குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இறப்பு எண்ணிக்கை நிலையாக உள்ளது. 300க்கும் குறைவான இறப்புகளே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பால் குறிப்பிட்டார்.

15 – 18 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? விளக்கப் படங்கள்

இந்த நேரத்தில் ஒமிக்ரான் பரவல் தன்மையின் தீவிரம் மிகவும் குறைவு என்று கூறுகின்ற எந்த தரவையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தார் பால். சூழல் மாறி வருகின்ற நிலையில், நாம் காண்பது அனைத்தும், ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக உயர்ந்து வரும் உலகளாவிய தொற்று எண்ணிக்கையின் ஒரு பங்கு என்று நம்புகின்றோம். இந்த மாறுபாடு அதிகம் பரவும் தன்மை கொண்டது. அதனால் நாம் அதிகரிக்கும் தொற்று குறித்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதன் தீவிரத்தன்மை இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. உலக சுகாதர மையம் ஒமிக்ரான் தீவிரத்தன்மை மிகவும் லேசானதாக இருக்கும் என்று கூறியுள்ளது. இருப்பினும் அதனை நாம் அப்படியே எடுத்துக் கொள்ள இயலாது என்று தேசிய கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால் அறிவித்தார்.

கடந்த ஏழு நாட்களில் (டிசம்பர் 23-30) ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை மற்றும் பாசிட்டிவ் ரேட் ஆகியவற்றை அதற்கு முந்தைய வாரம் (டிசம்பர் 17-23) வெளியான தொற்று எண்ணிக்கை மற்றும் பாசிடிவ் ரேட் தரவுகளுடன் ஒப்பிட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் 6 மாநிலங்களின் நிலையை குறித்து எச்சரிக்கை எழுப்பியது.

மகாராஷ்ட்ராவில் 13,200 வழக்குகள் பதிவாகியுள்ளன. 117% உயர்வை அடைந்துள்ள இந்த மாநிலத்தின் பாசிட்டிவிட்டி விகிதம் 0.92%-ல் இருந்து 2.59% ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 290% அதிகரித்து 2587 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாசிடிவ் விகிதம் 0.2%-ல் இருந்து 1% ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 1,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 245% அதிகமாக பதிவாகியுள்ளது தொற்று எண்ணிக்கை. மேலும் பாசிடிவ் விகிதமானது 0.19%-ல் இருந்து 0.54% ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 4,442 (18.49% அதிகரிப்பு), கர்நாடகாவில் 2,533 (26%) மற்றும் தமிழ்நாட்டில் 4,383 நபர்களுக்கு (2.35%) கொரோனா தொற்று பதிவாகியுள்ளன.

டிசம்பர் 22-28க்கு இடையே பதிவான வழக்குகளை டிசம்பர் 15-21-க்கு இடைப்பட்ட நாட்களில் பதிவான வழக்குகளுடன் ஒப்பிட்டு கவலை அளிக்கும் நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

மும்பையில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை 232% அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை 2044ல் துவங்கி 6787 வரை அதிகரித்துள்ளது. புனேவில் எண்ணிக்கை 1,554ல் துவங்கி 2,076 ஆக அதிகரித்தது. தானேவில் 913 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்தது. பெங்களூருவில் 1,445ல் ஆரம்பித்து 1902 ஆக அதிகரித்தது. சென்னையில் 1039 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கைகள் 1720 ஆக அதிகரித்தது. மும்பை புறநகரில் 521 முதல் 1670 வரையும், கூர்கோனில் 194ல் துவங்கி 738 ஆகவும், அகமதாபாதில் 207ல் துவங்கி 635 ஆகவும், நாஷிக்கில் 333ல் துவங்கி 383 ஆகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரம் என்னவோ அது தான் இது. பயப்பட வேண்டியது இல்லை. ஏன் என்றால் நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். நம்முடைய அனுபவம் அதற்கு உதவும். மேலும் அதிக அளவில் தடுப்பூசிகளை செலுத்தி உயர்ந்த பாதுகாப்பினை பெற்றிருக்கின்றோம். ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நாம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அனைத்து மாறுபாடுகளும் ஒரே மாதிரியாகவே தாக்குதல்களை நடத்துகின்றன என்பதால் முகக்கவசங்கள் அணிய வேண்டியது இன்றைய கட்டாயம் என்று பால் கூறினார்.

மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பிய போது, தற்போது தான் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது எங்கே நம்மை இட்டுச்செல்லும், இதனை நாம் எங்கே தடுக்க வேண்டும் என்பது எல்லாம் நம்முடைய கையில் தான் இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இதன் பரவலை தடுக்க வேண்டும். அதுவும் இப்போதே தடுக்க வேண்டும். தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதர சமூக சுகாதார நடவடிக்கைகள் மூலம் இதனை தடுத்து நிறுத்தலாம் என்றார். இந்த எழுச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். அது மிகவும் மிதமான தாக்கங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் இல்லை என்பதால் நாம் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை டோஸ் வேறொரு தடுப்பூசியாக இருக்கலாமா என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் விரைவில் மத்திய அரசு புதிய நெறிமுறைகளை வெளியிடும் என்று ஐ.சி.எம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா கூறினார்.

ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து பல்வேறு முக்கிய செய்திகள் இங்கே

Explained: டெல்லி, மும்பையில் அதிகரிக்கும் பாதிப்புகள்.. வரவிருக்கும் ஒமிக்ரான் எழுச்சியின் அறிகுறியா?

கொரோனாவுக்கு எதிராக மேலும் புதிய 2 தடுப்பூசிகள், ஒரு மாத்திரை: எப்படி வேலை செய்கிறது?

டெல்டாவிடம் இருந்து பாதுகாக்கும் ஒமிக்ரான்…தென் ஆப்பிரிக்கா ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment