கொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Delhi CM Arvind Kejriwal announced Rs 1 crore to the kin of personnel who die while treating COVID19
Delhi CM Arvind Kejriwal announced Rs 1 crore to the kin of personnel who die while treating COVID19

இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் போரில் ஆயிரக் கணக்கான மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தங்களை அர்பணித்துள்ளனர்.  கொரோனா வைரஸிற்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த போரில் தங்களை அர்பணித்துக் கொண்ட இவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு வாழ்க்கை காப்பீட்டு தொகையாக ரூ. 50 லட்சத்தை ஒதுக்கி  அறிவித்தது நிதி அமைச்சகம்.

மேலும் படிக்க : நாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்… ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி!

இந்நிலையில் டெல்லியில் அமைந்திருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள் இந்த போரில் உயிரிழக்க நேரிட்டால்,  அவர்களுக்காக ரூபாய் ஒரு கோடி நிதியை அவர்களின் குடும்பத்திற்கு தர இருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் உங்களின் அர்ப்பணிப்பு நாட்டை காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புக்கு சிறிதும் குறைந்தது அல்ல என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

ரூ. 1 கோடி நிதி உதவி தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ ஒன்றை, ஆம் ஆத்மியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.  டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது சுய ஊரடங்கில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க : பாதுகாப்பு ஆடைகள் இல்லை… குப்பை பைகளை பயன்படுத்தும் ஸ்பெயின் டாக்டர்கள்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi cm arvind kejriwal announced rs 1 crore to the kin of personnel who die while treating covid19

Next Story
நாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்… ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி!Azim Premji Foundation, Wipro commit ₹1,125 crore to tackle coronavirus crisis
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express