சோம்நாத் சாட்டர்ஜி மறைவு
சோம்நாத் சாட்டர்ஜி இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக தன்னுடைய ஆரம்ப காலத்தினை கொல்காத்தாவில் ஆரம்பித்தவர்.
2004ம் ஆண்டில் தொடங்கி 2009ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக பணியாற்றியவர் சோம்நாத்.
பாராளுமன்ற உறுப்பினராக
பாராளுமன்றத்தில் இது வரை 10 முறை எம்.பியாக பொறுப்பு வகித்திருக்கிறார். 1968ல் இந்திய பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
மக்களவையில் அதிக நாட்கள் எம்.பியாக பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. 1971ல் தொடங்கி 2009ம் ஆண்டு (1984 தேர்தலை தவிர) வரை அவர் மக்களவையில் எம்.பியாக செயல்பட்டிருக்கிறார்.
1996ம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர் சோம்நாத் சாட்டர்ஜி. 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்று 14வது மக்களவை சபாநாயகராக பதவியேற்றார். ?
2008ம் ஆண்டு சோம்நாத் இந்திய பொதுவுடமைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய பொதுவுடமைக் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெற்றுக் கொண்ட போது, சபாநாயகர் பதவியில் இருந்து சோம்நாத்தினை விலகச் சொல்லி கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது.
ஆனால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யாததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது இந்திய பொதுவுடமைக் கட்சி.
அவர் மரணத்தை தொடர்ந்து தலைவர்கள் தங்களின் இரங்கல்களை பதிவு செய்துவருகிறார்கள். அதைப் படிக்க
சோம்நாத் சாட்டர்ஜி மறைவு
தொடர்ந்து பல நாட்களாக சிறுநீரகக் கோளாறால் பாதித்து வந்த சோம்நாத் சாட்டர்ஜிக்கு கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டையாலஸிஸ் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரை நேற்று மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 89 ஆகும்.
அவர் மரணம் தொடர்பான முழுச் செய்தியினையும் படிக்க
சோம்நாத் சாட்டர்ஜி மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்ட நிலையில் அவரின் மறைவிற்கு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் தங்களின் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து அறிந்து கொள்ள